முகப்பு /கோயம்புத்தூர் /

இலைகள் விழுவதாக கூறி மரங்களை வெட்டிய நபர்.. கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..

இலைகள் விழுவதாக கூறி மரங்களை வெட்டிய நபர்.. கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..

X
வெட்டப்பட்ட

வெட்டப்பட்ட மரக்கிளைகள்

Coimbatore News : கோவை கவுண்டர் மில்ஸ் பகுதியில் தனியார் குடியிருப்பில் இருந்த 18 மரங்களை தனி நபர் ஒருவர் வெட்டி வீசியதாக குடியிருப்பு வாசிகள் வடக்கு வட்டாட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.

  • Last Updated :
  • Coimbatore, India

கோவை கவுண்டர் மில்ஸ் பகுதியில் உள்ளசன் பிரிக்ஸ் என்ற தனியார் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 8 ஆண்டுகளாக தங்களது குடியிருப்பு பகுதியில் நிழல் தரும் மரங்களை வைத்து வளர்த்து வந்தனர்.

இதனிடையே அப்பகுதியில் வசிக்கும் பிரகாஷ் என்ற தனிநபர் தனது தனது வீட்டின் முன் மரத்திலிருந்து விழும் இலைகள் அதிகமாக தேங்குவதாகவும், மரக்கிளைகள் விழுவதாகவும் கூறி திடீரென அங்கிருந்த 18 மரங்களை வெட்டினர். அனுமதியின்றி மரங்களை வெட்டியதை அறிந்த குடியிருப்பு வாசிகளின் இதுகுறித்து கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்திலும், கிராம நிர்வாக அதிகாரியான யமுனா என்பவரிடமும் புகார் அளித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    அதன்பேரில் அங்கு சென்ற கிராம நிர்வாக அதிகாரி அரசு அதிகாரிகளிடத்தில் எந்தவித முன் அனுமதியும் பெறாமல் பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்த 18 மரங்களை வெட்டிய பிரகாஷ் என்பவர் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    First published:

    Tags: Coimbatore, Local News