முகப்பு /கோயம்புத்தூர் /

கோவை நேரு விளையாட்டு அரங்கத்திற்கு வந்தது விடியல்..! புதுப்பிக்கும் பணியில் ஊழியர்கள் மும்முரம்..!

கோவை நேரு விளையாட்டு அரங்கத்திற்கு வந்தது விடியல்..! புதுப்பிக்கும் பணியில் ஊழியர்கள் மும்முரம்..!

X
கோவை

கோவை நேரு விளையாட்டு அரங்கம்

Kovai Nehru Stadium : ரூ.7 கோடி மதிப்பில் கோவை நேரு உள்விளையாட்டு அரங்கம் புதுப்பிக்கும் பணிகள் துவங்கியுள்ளது.

  • Last Updated :
  • Coimbatore, India

கோயம்புத்தூர் நேரு விளையாட்டு மைதானம் என்பது உள்ளூர் விளையாட்டு வீரர்களுக்கான வரப்பிரசாதம் என்று கூறலாம். சர்வதேச அளவிலான விளையாட்டு வீரர்களை உருவாக்கி வரலாறுகளில் இடம்பிடிக்க வைத்துள்ளது இந்த மைதானம்.

கோவை வ.உ.சி பூங்கா அருகே அமைந்துள்ள இந்த மைதானத்தில் கால்பந்து, கிரிக்கெட் மற்றும் தடகளப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். கடந்த 1970 மற்றும் 1990ம் ஆண்டுகளில் சந்தோஷ் டிராஃபி போட்டிகள் இந்த மைதானத்தில் நடைபெற்றது. இதனால் கோவை நேரு விளையாட்டு அரங்கம் பிரபலமான அரங்கமாக உள்ளது.

இந்த மைதானத்தில் 24 மணி நேரமும் போட்டிகள் நடத்தும் வகையில் ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இங்கு 400 மீட்டர் தடகளப் பாதையும் அமைந்துள்ளது. விளையாட்டு வீரர்களுக்கான தங்கும் அறைகள், மாநாடு மண்டபம், வீரர்கள் மைதானத்திற்குச் செல்வதற்கு பிரத்தியேக பாதை என அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது.

கோவை நேரு விளையாட்டு அரங்கம் புதுப்பிக்கும் பணி

இதையும் படிங்க : ஈரோடு மக்களின் மினி டூரிஸ்ட் ஸ்பாட்.. குளித்து குதூகளிக்க கொடிவேரி அணை!

சுமார் 30 ஆயிரம் பேர் அமர்ந்து விளையாட்டுகளை பார்வையிடும் வகையில் கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக மாநில அளவிலான தடகளப்போட்டிகள் இந்த அரங்கத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு அமைந்துள்ள தடகளப்பாதை சின்தடிக் மூலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தளம் பல மாதங்களாக புதுப்பிக்கப்படாமல் இருந்த நிலையில் அதனை புதுப்பித்து தர பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதுகுறித்து நியூஸ் 18 தளத்தில் விரிவான செய்தி பதிவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கோவைக்கு வருகை புரிந்த விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 7 கோடி ரூபாய் மதிப்பில் நேரு உள்விளையாட்டு அரங்கத்தை புதுப்பிக்கும் பணிகளை துவக்கி வைத்தார். அதன்படி பழைய ஓடுதள பாதைகள் அனைத்தும் பெயர்த்து எடுக்கப்பட்டு சிந்தடிக் ஓடுதளம் அமைக்கப்பட உள்ளது. மேலும் இங்கு மழை நீர் வடிகால் புதுபிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    தற்போது இந்த புதுப்பிக்கும் பணிகள் துவங்கி உள்ளன. ஜேசிபி இயந்திரங்கள் மூலம் பழைய ஓடுதள பாதைகள் அனைத்தும் அகற்றபட்டு சிந்தடிக் ஓடுதள பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை தரமாகவும் விரைந்தும் முடித்து தர வேண்டுமென விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    First published:

    Tags: Coimbatore, Local News