முகப்பு /கோயம்புத்தூர் /

அனுமதியின்றி அமைக்கப்பட்ட வேகத்தடைகள் அகற்றம்.. கோவை மாநகராட்சி ஆணையர் அதிரடி..

அனுமதியின்றி அமைக்கப்பட்ட வேகத்தடைகள் அகற்றம்.. கோவை மாநகராட்சி ஆணையர் அதிரடி..

மாதிரி படம்

மாதிரி படம்

Coimbatore News : கோவையில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட வேகத்தடைகள் அதிரடியாக அகற்றப்பட்டன.

  • Last Updated :
  • Coimbatore, India

கோயம்புத்தூர் மாநகராட்சியில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள 12 வேகத்தடைகள் அகற்றப்பட்டு, 346 இடங்களில் வேகத்தடை மற்றும் நடைபாதைகளில் வர்ணம் பூசப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் நடக்கும் பகுதியை குறிக்கும் வகையில் குறியீடுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றுள்ளதாகவும் மாநகராட்சி ஆணையர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கோயம்புத்தூர் மாநகராட்சி சாலைகளில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள வேகத்தடை இதுவரை 12 அகற்றப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சி சாலைகளில் உள்ள வேகத்தடை மற்றும் நடைபாதைகள் 346 இடங்களில் பொதுமக்கள் நடக்கும் பகுதியை குறிக்கும் வகையில் குறியீடுகள் (Marking) அமைக்கும் பணிகள் நடைபெற்றுள்ளது. மேலும் இப்பணி தொடர்ந்து நடைபெறும்”  என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

top videos
    First published:

    Tags: Coimbatore, Local News