ஹோம் /கோயம்புத்தூர் /

ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

ஆழியாறு அணை

ஆழியாறு அணை

Aliyar Dam : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள ஆழியாறு அணையில் இருந்து 2 ஆம் போக சாகுபடி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Coimbatore, India

  கோவை மாவட்டம் ஆழியாறு அணையில் இருந்து 6,400 ஏக்கர் நிலங்கள், இரண்டாம் போகமான சம்பா சாகுபடிக்கு பாசன வசதி பெறும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

  கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் வால்பாறைக்கு இடையே அமைந்துள்ளது ஆழியாறு அணை. 81 மீட்டர் உயரம் கொண்ட இந்த அணையின் பழைய ஆயக்கட்டு பாசனத்தில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா என இருபோக நெல் சாகுபடி நடைபெறுகிறது. குறுவை பருவத்துக்கு அறுவடை முடிந்து தற்போது சம்பா பருவத்துக்காக நாற்றாங்கால் பணிக்காக விவசாயிகள் நிலங்களை தயார் செய்து வருகின்றனர்.

  இந்நிலையில், பழைய ஆயக்கட்டு பாசன பகுதியில் நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். மேலும் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட அரசுக்கு, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கருத்துரு அனுப்பினர்.

  அதனைத் தொடர்ந்து, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு, அரசு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து மின் உற்பத்திக்கு தண்ணீர் செல்லும் வழியில் நேற்று வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

  இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், தற்போது அணையின் நீர்மட்டம் 119.30 அடியாக உள்ளது. 5 பழைய வாய்க்கால்களின் மூலம் பாசனம் பெறும் 6 ஆயிரத்து 400 ஏக்கர் நிலங்களின் 2ஆம் போக பாசனத்துக்கு அடுத்த ஆண்டு (2023) ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி வரை 182 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும்.

  தற்போதைய நீர் இருப்பு மற்றும் எதிர்பார்க்கப்படும் நீர்வரத்தை பொறுத்து 1,235 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

  Published by:Suresh V
  First published:

  Tags: Coimbatore, Local News