கோவை காரமடையில் சாலையை விரிவாக்கம் செய்து, இருபக்கமும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
மேட்டுப்பாளையம், காரமடை வழியாக, கோவை செல்லும் பிரதான சாலையானது தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்டதாகும். கோவை கவுண்டம்பாளையத்தில் இருந்து, சின்னமத்தம்பாளையம் வரை சாலை விரிவாக்கம் செய்து, நான்கு வழி சாலையாக மாற்றப்பட்டுள்ளது. அதேபோன்று காரமடை லாரி உரிமையாளர் பெட்ரோல் பங்கில் இருந்து, மேட்டுப்பாளையம் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வரை உள்ள, சாலையை விவாக்கம் செய்து நான்கு வழி சாலையாக மாற்றப்பட்டுள்ளது.
தற்போது சின்னமத்தம்பாளையத்தில் இருந்து, காரமடை லாரி உரிமையாளர் பெட்ரோல் பங்க் வரை உள்ள சாலையை, நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன.
மேலும் படிக்க : ஒரு லிட்டர் டீசலில் ரயில் எத்தனை கிலோ மீட்டர் ஓடும்னு தெரியுமா...? வாங்க தெரிஞ்சிக்கலாம்..!
முதல் கட்டமாக சாலையில், இரு பக்கமும் இரண்டு மீட்டருக்கு விரிவாக்கம் செய்ய, குழி தோண்டி, ஜல்லிக்கற்கள் நிரப்பப்பட்டது. விரிவாக்கம் செய்யும் இடத்தில் இருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. அதன் பின்பு நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் சாலையின் இரு பக்கம், மழை நீர் செல்ல ரெடிமேட் கான்கிரீட் தொட்டிகள் பதித்து, கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இது குறித்து காரமடை நகரில் உள்ள சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,' நீண்ட நாட்களுக்கு பிறகு சாலை விரிவாக்க பணிகள் நடைபெறுவது மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும் சாலையின் இரு பக்கம் மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்கும் பணிகளும் நடைபெறுகின்றன. இதில் காரமடை நகரில் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, வடிகால்கள் அமைக்க வேண்டும். ஆக்கிரமிப்புளை அகற்றாமல், சாலையில் சாக்கடை அமைத்தால் பொதுமக்கள் சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது,' என்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Local News