ஹோம் /கோயம்புத்தூர் /

கோவையில் கார்த்திகை தீபத்திற்காக தயாராகும் ராட்சத விளக்குகள்...  மண்பாண்ட தொழிலாளர்கள் மும்முரம்....

கோவையில் கார்த்திகை தீபத்திற்காக தயாராகும் ராட்சத விளக்குகள்...  மண்பாண்ட தொழிலாளர்கள் மும்முரம்....

தயாராகும்

தயாராகும் ராட்சத விளக்குகள்

Coimbatore District News : கோவையில் கார்த்திகை தீபத்திற்காக தயாராகும் ராட்சஷ விளக்குகள். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கார்த்திகை மாதம் நெருங்கி வருவதை முன்னிட்டு கோவையில் மண்பாண்டங்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள் அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

கோவை கவுண்டம்பாளையத்தை அடுத்த மீனாட்சிபுரம் பகுதியில் மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் மண்பாண்டங்கள், பூந்தொட்டிகள் உட்பட மண்ணால் செய்யப்படும் பல்வேறு பொருட்களை தயாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், வரும் டிசம்பர் 6-ம் தேதி கார்த்திகை தீபம் விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க : தேயிலை தோட்டத்தில் முகாமிட்டுள்ள 19 காட்டுயானைகள்.. பீதியில் பொதுமக்கள் - வனத்துறை எச்சரிக்கை

இங்கு தயாரிக்கப்படும் அகல் விளக்குகள் கோவை மாநகர பகுதிகள் மட்டுமில்லாது, மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும், மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கார்த்திகை தீப அகல் விளக்கு விற்பனை மந்தமாகவே காணப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு அகல் விளக்குகள் அதிக அளவில் விற்பனை நடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மண்பாண்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

10 மில்லி கொள்ளளவு அகல் விளக்குகள் முதல் 8 லிட்டர் கொள்ளளவு கொண்ட ராட்சத அகல் விளக்குகள் வரை இங்கு தயாரிக்கப்படுவதாக மண்பாண்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

Published by:Karthi K
First published:

Tags: Coimbatore, Local News