Home /coimbatore /

1,000 பேருக்கு வேலை.. கோவை டைடல் பார்க்ல தொடங்கியாச்சு Quintessence நிறுவனம்.. இங்கு வேலைக்கு சேர என்ன தகுதி தேவை?

1,000 பேருக்கு வேலை.. கோவை டைடல் பார்க்ல தொடங்கியாச்சு Quintessence நிறுவனம்.. இங்கு வேலைக்கு சேர என்ன தகுதி தேவை?

கோவை

கோவை - Quintessence நிறுவனம்

Coimbatore Quintessence | கோவையில் 1000 பேருக்கு வேலை வழங்கும் க்வின்டெசென்ஸ் நிறுவனம் டைடல் பூங்காவில் துவங்கப்பட்டுள்ளது - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? தகுதிகள் என்ன?

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
யுஎஸ் ஹெல்த்கேர் ரெவின்யூ சைக்கிள் நிர்வாகத்தில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வரும் க்வின்டெசென்ஸ் (Quintessence) புதிய அலுவலகம் கோவையில் துவங்கப்பட்டுள்ளது.

யுஎஸ் ஹெல்த்கேர் ரெவின்யூ சைக்கிள் நிர்வாகத்தில் (www.qbsshealth.com) முன்னணியில் இருக்கும் க்வின்டெசென்ஸ் (Quintessence) அதன் வணிக விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக கோவையில் உள்ள டைடல் பார்க்கில் அதன் புதிய அலுவலகத்தை துவங்கியுள்ளது.

புதிய அலுவலகம் தொடக்க விழாவில் அதன் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனர் நிர்மல்குமார் கலந்து கொண்டு அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் சிறிய அளவில் Quintessence துவங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டு கோவையில் கீரநத்தம் பகுதியில் எங்கள் நிறுவனம் துவங்கப்பட்டது. தற்போது கோவையில் மட்டும் 800க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். அடுத்த இரண்டு மாதங்களில் 200க்கும் மேற்பட்டோரை உடனடியாக பணியமர்த்த உள்ளோம்.

அதன்படி அடுத்த இரண்டு மாதங்களில் கோவையில் மட்டும் ஆயிரம் பேர் பணிபுரிவார்கள். எங்கள் நிறுவனத்தில் 60 சதவீதம் பெண்கள் பணிபுரிகின்றனர். அமெரிக்காவில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் இன்சூரன்ஸ் மூலம் பயனடைவதற்கான பணியை நாங்கள் மேற்கொள்கிறோம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கோவை ஹோப் காலேஜ் பகுதி டைடல் பார்க்கில் 2வது கிளை அலுவலகம் 11,507 சதுர அடியில் புதிதாக அமைந்துள்ளது. பட்டப்படிப்பு படித்த எவரும் எங்களது அலுவலகத்தில் பணிக்கு சேர முடியும். துவக்கத்தில் ரூ.15 ஆயிரம் ஊதியம் வழங்கப்படுவதோடு, 8 வார கால பயிற்சி வழங்கப்படும்.

அடுத்த 18 மாதங்களில் ரூ.25 ஆயிரம் வரை ஊதியம் பெற முடியும். எங்கள் நிறுவனத்தில் பணிக்கு சேர விண்ணப்பிக்க விரும்புவோர் www.qbsshealth.com என்ற இணைய முகவரியை அணுகலாம். அல்லது talent@qbss.in என்ற மின்னஞ்சல் முகவரியில் சுயவிவரங்களை பகிரலாம். தற்போது எங்கள் நிறுவனத்தில் 60 சதவீத பெண்கள் பணிபுரிகின்றனர்.

ரூ.100 கோடி வரையில் ஆண்டு வருமானம் ஈட்டும் நிறுவனமாக எங்கள் நிறுவனம் உள்ளது.” இவ்வாறு அவர் கூறினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Arun
First published:

Tags: Coimbatore, IT JOBS, Local News

அடுத்த செய்தி