முகப்பு /கோயம்புத்தூர் /

போக்குவரத்து நெரிசலை குறைக்க காவல்துறையின் புதிய நடைமுறைகள்.. வரவேற்கும் கோவை மக்கள்..

போக்குவரத்து நெரிசலை குறைக்க காவல்துறையின் புதிய நடைமுறைகள்.. வரவேற்கும் கோவை மக்கள்..

X
மாதிரி

மாதிரி படம்

Coimbatore News | கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்கும் வகையில் பல்வேறு புதிய முறைகளை அறிமுகப்படுத்தி வருவதாகவும், இதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதாகவும் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

  • Last Updated :
  • Coimbatore, India

உலக அளவில் ஆண்டுதோறும் 10 முதல் 12 சதவீதம் பேர் தலையில் காயம் ஏற்படுவதால் உயிரிழப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் பெரும்பாலானோர் விபத்துகளில் சிக்கி உயிரிழந்துவிடுகிண்றனர். இதனிடையே கோவையில் போக்குவரத்தை நெரிசலைக்கட்டுப்படுத்தி விபத்துக்களை குறிக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில் தலைக்காயம் மற்றும் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய சிகிச்சை முறைகள் தொடர்பான விழிப்புணர்வு பேரணி கோவையில் நடைபெற்றது.

தனியார் மருத்துவமனை சார்பில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தலைக்காயம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த பேரணியானது ரேஸ்கோர்ஸ் ஆட்சியர் குடியிருப்பு அருகே தொடங்கி நஞ்சப்பா சாலை வரை சென்று முடிவடைந்தது. முன்னதாக காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பேசுகையில், “மக்கள் தொகை மற்றும் வாகன எண்ணிக்கை அதிகரித்து வரும் இந்த நேரத்தில் பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை சரியாக கடைபிடித்தாலே பெரும்பான்மையான விபத்துக்களை தவிர்க்க இயலும்” என்று கூறினார். மேலும், கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்கும் வகையில் பல்வேறு புதிய முறைகளை அறிமுகப்படுத்தி வருவதாகவும், இதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

First published:

Tags: Coimbatore, Local News