ஹோம் /கோயம்புத்தூர் /

கோவையில் காலி மது பாட்டில்களுடன் ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு

கோவையில் காலி மது பாட்டில்களுடன் ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு

X
மதுபாட்டில்களுடன்

மதுபாட்டில்களுடன் வந்த பெண்கள்

Coimbatore Public petition with empty liquor bottles | பொதுமக்களை மீறி டாஸ்மாக் கடை திறந்தால் மக்களை திரட்டி  மாபெரும் போராட்டம் நடத்துவோம் என செல்வபுரம் பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

பள்ளிகள், தேவாலயங்கள் உள்ள பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கக் கூடாது என்று வலியுறுத்தி கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலி மது பாட்டில்களுடன் வந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில்  டாஸ்மாக் கடை அமையவுள்ளது. இதனை கண்டித்து செல்வபுரம் காலனி பொதுமக்கள் காலி மதுபாட்டில்களுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர். பள்ளிகள், தேவாலயங்கள், நியாயவிலைக்கடை உள்ள பகுதியில் மதுபானக்கடை அமைக்க முயற்சி நடைபெற்று வருவதாகவும், இதனைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து பேசிய கருமத்தம்பட்டி நகராட்சியின் 25வது வார்டு கவுன்சிலர் பாலசுப்பிரமணியம், சோமனூரை அடுத்த செல்வபுரம் காலனி பகுதியில் ஏற்கனவே ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது என்றும்  இதனால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தது. இதனிடையே மக்கள் அனைவரும் போராட்டம் நடத்தி அந்த டாஸ்மாக் கடையை அகற்றினோம். என்றார். இதனிடையே தான் சவுந்திரராஜன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் மீண்டும் டாஸ்மாக் கடை அமைக்க பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தொடர்ந்து பேசிய அவர், டாஸ்மாக் கடை அமைக்க முற்படும் பகுதியில் பள்ளிகள், தேவாலயம், மசூதி, நியாயவிலைக்கடை மற்றும் குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்தால் அவ்வழியாக செல்லும் பள்ளி குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி மனு அளித்துள்ளோம் என 25வது வார்டு கவுன்சிலர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார். மேலும் இங்கு டாஸ்மாக கடை அமைந்தால் மக்களை திரட்டி  மாபெரும் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

First published:

Tags: Coimbatore, Local News