ஹோம் /கோயம்புத்தூர் /

கிணற்றை காணோம்... வடிவேலு காமெடி போல கோவை குறைதீர்ப்பு முகாமில் பொதுமக்கள் மனு 

கிணற்றை காணோம்... வடிவேலு காமெடி போல கோவை குறைதீர்ப்பு முகாமில் பொதுமக்கள் மனு 

வடிவேலு காமெடி

வடிவேலு காமெடி

Coimbatore District | கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடந்த குறைதீர்ப்பு முகாமில் வடிவேல் பட காமெடி பாணியில் கிணற்றை காணவில்லை என்று குறிப்பிட்டு பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. அப்போது, பேரூர் தீத்திபாளையம் விவேகானந்தர் நகரை சேர்ந்த பொதுமக்கள் திருண்டு வந்து மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில், தீத்திபாளையம் விவேகானந்தர் நகரில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறோம். இங்குள்ள 70 சென்ட் அங்கீகரிக்கப்பட்ட மனையை சிலர் ஆக்கிரமித்து விட்டனர். அவர்கள் போலி ஆவணங்கள் மூலம் மனையை விற்பனை செய்ய முயற்சி செய்து வருகின்றனர்.

மேலும் அங்குள்ள கிணற்றையும் காணவில்லை. எனவே ரிசர்வ் சைட்டை ஆக்கிரமித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அங்கு ஊராட்சிக்கு சொந்தமான இடம் என்று அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில், செல்வபுரம் காலனி பொதுமக்கள் காலி மதுபாட்டில்களுடன் வந்து மனு அளித்தனர். அவர்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் ஏற்கனவே செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையை போராட்டம் நடத்தி அகற்றினோம். இந்த நிலையில் அங்கு மீண்டும் டாஸ்மாக் கடை அமைக்க பணிகள் நடைபெறுகிறது.

Must Read : நீங்காத நினைவைக் கொடுக்கும் தென்காசி மாவட்ட அணைகளுக்கு ஒரு டிரிப் அடிங்க..

இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்தால் அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவர்களும், பெண்களுக்கும் பாதிக்கப்படுவார்கள். எனவே டாஸ்மாக் கடை அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதேபோல பலரும், குறைகளைச் சொல்லி நூதனமுறையில் வந்து மனுக்களை கொடுத்தனர்.

First published:

Tags: Coimbatore, Local News