பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியோர், சீர்மரபினர் மாணவர்களுக்கும் இளம் சாதனையாளர்களுக்கான பிரதமரின் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் மாணவர்கள் எவ்வாறு விண்ணப்பிப்பது. கடைசி தேதி என்ன என்று கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த 15,000 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை பெற வழி வகை செய்கிறது.
இதற்கு விண்ணப்பிக்கும் மனுதாரா்களின் பெற்றோா் அல்லது பாதுகாவலா்களின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள் இருத்தல் வேண்டும். இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9 அல்லது 11-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்க வேண்டும். 9, 10ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ரூ.75 ஆயிரம், 11, 12ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ரூ.1.25 லட்சம் வீதம் கல்வி
உதவித்தொகை வழங்கப்படும்.
தேசியத் தோ்வு முகமை நடத்தும் நுழைவு தோ்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தோ்வு செய்யப்படுவா். இதற்கு ஆகஸ்ட் 26-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆகஸ்ட் 27 முதல் 31-ம் தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்படும்.
கணினி வழித் தோ்வு செப்டம்பா் 11-ம் தேதி நடைபெறவுள்ளது. விண்ணப்பத்துடன் கைப்பேசி எண், ஆதாா் எண், ஆதாா் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு எண், வருமானச் சான்றிதழ் மற்றும் ஜாதிச் சான்றிதழ் ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டம் தொடா்பான முழுமையான விவரங்கள் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Local News