கோவை மற்றும்
திருப்பூர் மாவட்டங்கள் ஜவுளித்தொழிலில் சிறந்து விளங்கி வருகின்றன. இந்த இரண்டு மாவட்டங்களிலும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. இவை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் 3 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. இந்த தொழிலை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர்.
ஏற்கனவே பஞ்சு விலையேற்றம் மற்றும் நூல் விலையேற்றம் காரணமாக ஜவுளித்தொழில் நலிவடைந்து வருகிறது. பருத்தி பதுக்கல் இருப்பதாலும், போதுமான விளைச்சல் இல்லை என்பதாலும் விலையேற்றம் அடைவதாக தொழில்துறையினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த சூழலில், விசைத்தறியாளர்கள் தங்களுக்கு முறையான கூலி உயர்வு வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர்.
கூலி உயர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டாலும், நிறுவனங்கள் அதனை அமல்படுத்துவதில்லை என்றும், 12 மணி நேரம் உழைத்தாலும் ரூ.400 முதல் ரூ.600 வரை மட்டுமே வருவாய் கிடைப்பதாக தெரிவிக்கின்றனர்.
விசைத்தறியை இயக்கும் போது பல மையில் தூரம் நடக்கும் அளவுக்கு, நடக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும், எவ்வளவு சிரமப்பட்டு உழைத்தாலும் குடும்பத்தை கரைசேர்க்க முடியவில்லை என்றும் வேதனை தெரிவிக்கின்றனர். தமிழக அரசு இந்த பிரச்சனையில் தலையிட்டு தொழிலாளர்களுக்கு முறையான கூலி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பது தொழிலாளர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
செய்தியாளர் : சௌந்தர்மோகன்
உங்கள் நகரத்திலிருந்து(Coimbatore)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.