ஹோம் /கோயம்புத்தூர் /

கோவை மாவட்டத்தில் நாளை இந்த பகுதிகளில் எல்லாம் மின் தடை

கோவை மாவட்டத்தில் நாளை இந்த பகுதிகளில் எல்லாம் மின் தடை

மின் தடை

மின் தடை

Coimbatore District | கோவை மாவட்டத்தில் நாளை ( 15ஆம் தேதி) காளப்பட்டி, எம்.ஜி.சாலை துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், இந்த பகுதிகளில் மட்டும் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை மாவட்டத்தில் நாளை (செவ்வாய் கிழமை) காளப்பட்டி, எம்.ஜி.சாலை துணை மின் நிலையங்களில் மாதாந்திர பணிகள் நடப்பதால், இந்த பகுதிகளில் மின் தடை ஏற்படும் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, நாளை மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால், பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Must Read : தமிழ்நாட்டின் ஸ்பா - குற்றாலம் மெயின் அருவியின் சிறப்புகள் தெரியுமா?

இதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காளப்பட்டி துணை மின் நிலையம்: காளப்பட்டி, வீரியம்பாளையம், சேரன்மாநகர், நேரு நகர், சிட்ராட் , கை கோளம்பாளையம், வள்ளியம்பாளையம், பாலாஜி நகர், கே.ஆா்.ஆா்பாளையம், ஜீவா நகா், விளாங்குறிச்சி, தண்ணீா் பந்தல், லஷ்மி நகர், முருகன் நகர், பீளமேடு இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஷார் நகர், மகேஷ்வரி நகர், குமுதம்நகர், செங்காளியப்பன் நகர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எம்.ஜி.சாலை துணை மின் நிலையம் : எஸ்.ஐ.ஹெச்.எஸ்.காலனி, சக்தி நகர், நேதாஜிபுரம், அம்மன் நகர், ஜெ.ஜெ.நகர், கங்கா நகர், பெத்தேல் நகர் ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது.

Published by:Suresh V
First published:

Tags: Coimbatore, Local News, Power cut, Power Shutdown