ஹோம் /கோயம்புத்தூர் /

கோவை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் பவர் கட்.. இதில் உங்க ஏரியா இருக்கா?

கோவை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் பவர் கட்.. இதில் உங்க ஏரியா இருக்கா?

மின் தடை பகுதிகள்

மின் தடை பகுதிகள்

Coimbatore District | கோவை மாவட்டத்தில் நாளை (புதன் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

கோயம்புத்தூர் மாவட்டம் குனியமுத்துார் துணை மின் நிலையத்தில் நாளை (28-12-2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால், பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை காலை 9 மணி முதல் முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்படும் என, குனியமுத்துார் செயற்பொறியாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

மின் தடை பகுதிகள்:

சுந்தராபுரம் ஒருபகுதி, இடையர்பாளையம், குனியமுத்துார், புட்டுவிக்கி, சுண்டக்காமுத்துார், கோவைபுதுார், பி.கே.புதுார் மற்றும் நரசிம்மபுரம் ஆகிய இடங்களில் நாளை மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Coimbatore, Local News, Power Shutdown