முகப்பு /கோயம்புத்தூர் /

சோழர் காலத்து நகைகளை அணிய ஆசையா? பொன்னியின் செல்வன் ஸ்பெஷல் நகை கலெக்‌ஷன் அறிமுகம்...

சோழர் காலத்து நகைகளை அணிய ஆசையா? பொன்னியின் செல்வன் ஸ்பெஷல் நகை கலெக்‌ஷன் அறிமுகம்...

X
கோவை

கோவை - சோழர் கால டிசைன்களில் நகைகள்

Coimbatore - Chozha Design Jewels | சோழர் கால கட்டிடக்கலை, சிற்பம், ஓவியம் ஆகியவற்றை கண் முன் நிறுத்தும் விதமாக புதிய தங்க நகைகளை கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள தனிஷ்க் நகைக்கடை அறிமுகப்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

சோழர்கால சிற்பங்கள், ஓவியங்களை கண்முன் நிறுத்தும் விதமாக பொள்ளாச்சியில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் அறிமுகமாகி உள்ள கண்கவர் சோழா கலெக்சன்ஸ் தங்க நகை ஆபரணங்கள் பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தில் திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் குந்தவை மற்றும் நந்தினி வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த கதாபாத்திரத்திற்காக இருவரும் அணிந்திருந்த உடைகள் மற்றும் நகைகள் பெண்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்த சுழலில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் சோழா கலெக்சன்ஸ் என்ற பெயரில் புதிய நகை டிசைன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: பொன்னியின் செல்வன் போற்றும் பழையாறை - சிறப்புகள் என்னென்ன தெரியுமா?

சோழர் கால கட்டிடக்கலை, சிற்பம், ஓவியம் ஆகியவற்றை கண் முன் நிறுத்தும் விதமாக புதிய தங்க நகைகளை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில் குறிப்பாக சோழர் கால ராஜ புரம், பிரகதீஸ்வரா,சோழர் கால நாணயங்கள், புலி வாகனம் லக்ஷ்மி போன்ற டிசைன்களில் நெக்லஸ்கள், சோழர் கால கோபுரங்கள், புலி வாகனம், யானைகள், தூண்கள் ஆகிய டிசைன்களை கொண்ட கம்மல்கள் வளையல்கள் ஆகியவை விற்பனைக்கு வந்துள்ளன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி மக்களை பிரம்மிப்படைய செய்த இந்த நேரத்தில் இந்த சோழா கலெக்சன்கள் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

First published:

Tags: Coimbatore, Local News, Ponniyin selvan, Rajarajacholan