முகப்பு /கோயம்புத்தூர் /

Pongal 2023 : பொங்கல் விழாவில் கும்மியாடி அசத்திய கோவை நிர்மலா மகளிர் கல்லூரி மாணவிகள்..

Pongal 2023 : பொங்கல் விழாவில் கும்மியாடி அசத்திய கோவை நிர்மலா மகளிர் கல்லூரி மாணவிகள்..

X
கும்மியாடி

கும்மியாடி அசத்திய கல்லூரி மாணவிகள்

Coimbatore Student Pongal Celebration | கல்லூரி வளாகத்திலேயே பறை இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. அரங்கம் அதிரும் அளவுக்கு ஒலித்த பறை இசைக்கு 500க்கும் மேற்பட்ட மாணவிகள் ஒன்றாக இணைந்து நடனமாடி அசத்தினர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கோவையில் தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கல்லூரி மாணவிகள் பொங்கல் வைத்து கும்மியாடி அசத்தினர்.

பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி பல்வேறு கல்லூரிகளிலும் மாணவ மாணவிகள் பொங்கல் விழா கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் கோவை சுங்கம் பகுதியில் உள்ள நிர்மலா மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இதில் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து பொங்கல் வைத்து சூரியனுக்கு படைத்து வழிபாடு நடத்தினர். இதனைத் தொடர்ந்து ஒருவருக்கு ஒருவர் பொங்கலை ஊட்டி பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும், கல்லூரி வளாகத்திலேயே பறை இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. அரங்கம் அதிரும் அளவுக்கு ஒலித்த பறை இசைக்கு 500க்கும் மேற்பட்ட மாணவிகள் ஒன்றாக இணைந்து நடனமாடி அசத்தினர். இதனைத் தொடர்ந்து குழுவாக இணைந்து கும்மியாட்டம் ஆடினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை நண்பர்களுடன் இணைந்து கொண்டாடுவது உற்சாகம் அளிப்பதாகவும், ஆண்டுதோறும் இந்த நாளுக்காக காத்திருப்பதாகவும் மாணவிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

First published:

Tags: Coimbatore, Local News, Pongal 2023