ஹோம் /கோயம்புத்தூர் /

கோவை போலீசார் ஆடிப்பாடி கொண்டாடிய பொங்கல் பண்டிகை.. காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் சுவாரஸ்யம்..

கோவை போலீசார் ஆடிப்பாடி கொண்டாடிய பொங்கல் பண்டிகை.. காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் சுவாரஸ்யம்..

X
கோவை

கோவை

Police Celebrate Pongal : காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து கோவை மாநகர காவல் துறையினர் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் கோவை மாநகர காவல் துறையினர் அவர்களது குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.இதில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் அவரது குடும்பத்தினருடன் கலந்துகொண்டு அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

இதில் பொங்கல் பொங்கி வரும்போது அனைவரும் “பொங்கலோ பொங்கல்” என மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் அனைவரும் கும்மியடித்து பொங்கல் பாட்டு பாடி மகிழ்ச்சியுடன் பொங்கலை கொண்டாடினர். கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்ற இந்த பொங்கல் விழாவில் மாநகர காவல்துறையை சேர்ந்த காவலர்கள் அவர்களது குடும்பத்தினருடன் கோலமிட்டு தனித்தனியாக பொங்கல் வைத்து படையல் இட்டு சூரிய வழிபாடு செய்தனர்.

First published:

Tags: Coimbatore, Local News, Pongal 2023