முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / வாயில் காயம்... சாப்பிட முடியாமல் தவித்த யானை உயிரிழப்பு! - பொள்ளாச்சி அருகே சோகம்!

வாயில் காயம்... சாப்பிட முடியாமல் தவித்த யானை உயிரிழப்பு! - பொள்ளாச்சி அருகே சோகம்!

உயிரிழந்த யானை

உயிரிழந்த யானை

Coimbatore elephant | வாயில் காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த யானை 2 நாட்களுக்கு பிறகு உயிரிழந்தது.

  • Last Updated :
  • Pollachi, India

பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்ஸ்லிப் அருகே உள்ள வரகளியார் முகாமில் கடந்த மூன்று நாட்களாக சிகிச்சை பெற்று வந்த பெண் காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை வன சரகம் ஆதிமாதையனூர் பகுதியில் வாயில் காயமடைந்த நிலையில் உணவு உட்கொள்ள முடியாமல் தவித்து வந்த சுமார் 15 வயதுமிக்க பெண் காட்டு யானை, டாப்ஸ்லிப் அருகே உள்ள வரகளியார் வனத்துறை யானைகள் பயிற்சி மையத்திற்கு கடந்த 17ஆம் தேதி இரவு கொண்டுவரப்பட்டது.

இரண்டு தினங்களாக யானைக்கு வன கால்நடை மருத்துவ குழு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சோர்வுடனே காணபட்ட அந்த யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. தொடர்ந்து யானைக்கு உடற்கூறாய்வு செய்யப்பட்டு புதைக்கப்பட்டது.

செய்தியாளர்: ம.சக்திவேல், பொள்ளாச்சி.

First published:

Tags: Coimbatore, Elephant, Local News, Pollachi