முகப்பு /கோயம்புத்தூர் /

கோவையில் குறைதீர்ப்பு நாளில் கடுமை காட்டிய போலீசார்.. மாற்றுத்திறனாளிகள் அவதி..

கோவையில் குறைதீர்ப்பு நாளில் கடுமை காட்டிய போலீசார்.. மாற்றுத்திறனாளிகள் அவதி..

X
கோவை

கோவை

Coimbatore Today News | கோவையில் மாற்றுத்திறனாளிகளை அவதியடையச் செய்த போலீசார் 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமையன்று மக்கள் குறைதீர்ப்பு நாள் நடைபெறுகிறது. இந்த குறைதீர்ப்பு நாளில் மாவட்ட ஆட்சியர் மக்களிடையே நேரடியாக மனுக்களை பெற்று அவற்றை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவார். இந்த நாளில் மாவட்டம் முழுவதிலும் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வரும் மக்கள் தங்களது குறைகளை கோரிக்கை மனுவாக எழுதி அளிக்கின்றனர்.

இதனிடையே நீண்ட நாட்களாக பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காத மக்கள் விரக்தியடைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே தீக்குளிப்பு உள்ளிட்ட தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். இதனால் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு சோதனைகள் நடைபெறுகிறது. அந்தவகையில் இன்று மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு வந்த பொதுமக்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

மேலும் பொதுமக்கள் கொண்டுவரும் பைகளில் எரிபொருள் ஏதேனும் வைத்துள்ளனரா? சந்தேகிக்கத்தக்க பொருட்கள் ஏதேனும் வைத்துள்ளனரா? என்பது தொடர்பாக போலீசார் சோதனை நடத்தினர். ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மாற்றுத்திறனாளிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் வந்த 3 சக்கர வாகனங்கள் நிறுத்தப்படு முழுமையாக சோதனை நடத்தப்பட்டது. இதனால் மாற்றுத்திறனாளிகள் கடும் அவதியடைந்தனர்.

First published:

Tags: Coimbatore, Local News