Home /coimbatore /

வால்பாறை: ஆபத்தான ஆற்று பகுதிகளில் குளிக்க தடை- போலீசார் எச்சரிக்கை.!

வால்பாறை: ஆபத்தான ஆற்று பகுதிகளில் குளிக்க தடை- போலீசார் எச்சரிக்கை.!

வால்பாறை

வால்பாறை

Coimbatore District News : வால்பாறை சுற்றுவட்டாரப்பகுதிகளில்  ஆபத்தான இடங்களில் உள்ள ஆறுகளில் இறங்கி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்து எச்சரித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் போலீசார்.  

    வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் ஆபத்தான இடங்களில் உள்ள ஆறுகளில் இறங்கி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்து எச்சரித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் கோவை மாவட்ட போலீசார்.

    கோவை மாவட்டத்தின் ஒரே மலைவாசஸ் தலமாக வால்பாறை விளங்குகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். இதற்கிடையில் வால்பாறை பகுதியில் கடந்த 15 நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதனால், சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.

    கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தென்மேற்கு பருவ மழை பெய்து வரும் நிலையில் கடந்த 9-ந் தேதி முதல் சுற்று வட்டார பகுதி முழுவதும் இரவு, பகலாக கனமழை பெய்தது. இந்த மழை காரணமாக வால்பாறை பகுதியில் கடுமையான குளிரும், பனிமூட்டமும் நிலவி வந்தது. மேலும், ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது சுற்றுலா பயணிகள் வரத்து குறைவாக இருந்தது.

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    இந்நிலையில், கடந்த 4 நாட்களாக வால்பாறை பகுதியில் மழை குறைய தொடங்கியது. பகலில் கடுமையான வெயில் வாட்டி வருகிறது. இதனால் வால்பாறை பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் வருகை மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. வால்பாறை கூழாங்கல், கருமலை ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் இறங்கி குளித்து வந்தனர். இதையடுத்து, ஆபத்தான பகுதிகளில் யாரும் இறங்கி குளிக்கக் கூடாது என போலீசார் எச்சரிக்கை அறிவிப்பை சுற்றுலா பயணிகளுக்கு விடுத்துள்ளனர்.

    செய்தியாளர்: ராஜீவ்காந்த்.
    Published by:Arun
    First published:

    Tags: Coimbatore, Local News, Valparai Constituency

    அடுத்த செய்தி