முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / ஆர்எஸ்எஸ் பேரணியில் நிபந்தனை மீறல்... வழக்குப்பதிவு செய்த கோவை காவல்துறை...!

ஆர்எஸ்எஸ் பேரணியில் நிபந்தனை மீறல்... வழக்குப்பதிவு செய்த கோவை காவல்துறை...!

ஆர்.எஸ்.எஸ் பேரணியில் நிபந்தனைகளை மீறியதாக வழக்குப்பதிவு

ஆர்.எஸ்.எஸ் பேரணியில் நிபந்தனைகளை மீறியதாக வழக்குப்பதிவு

கோவையில் ஆர்எஸ்எஸ் பேரணியில் நீதிமன்ற நிபந்தனைகளை மீறியதாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  • Last Updated :
  • Coimbatore, India

உச்சநீதிமன்றத்தின் அனுமதி உத்தரவை அடுத்து, தமிழ்நாடு முழுவதும் 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி ஞாயிறு அன்று நடைபெற்றது. அந்தவகையில் கோவையிலும் பொன்னையராஜபுரம் பகுதியில் இருந்து தேர்நிலை திடல் வரை ஆர்.எஸ்.எஸ் பேரணி நடைபெற்றது.

அப்போது, நீதிமன்ற நிபந்தனைகளை மீறி கைகளில் தடி பயன்படுத்தியதாகவும், பொது கூட்டத்தில் சிலம்பு குச்சிகளுடன் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கோவை மாவட்ட ஆர்எஸ்எஸ் தலைவர் சுகுமார், மாவட்ட இணைச் செயலாளர் குமார், ஊடகத் தொடர்பாளர் விஜயகுமார், செயலாளர் முருகன் உள்ளிட்டோர் மீது வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளித்த காவல்துறை,  மற்ற மதங்கள், சாதிகளைப் பற்றிப் பேச கூடாது, பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால் பொறுப்பேற்க வேண்டும் என்றும், லத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது உள்ளிட்ட 12 நிபந்தனைகளை விதித்தது குறிப்பிடத்தக்கது.

top videos
    First published:

    Tags: RSS