முகப்பு /கோயம்புத்தூர் /

ஹெல்மெட் அணியாமல் பயணித்தவர்களுக்கு கிளாஸ் எடுத்த கோவை போலீஸ்..

ஹெல்மெட் அணியாமல் பயணித்தவர்களுக்கு கிளாஸ் எடுத்த கோவை போலீஸ்..

X
கோவை

கோவை

Coimbatore Police Department | கோவையில் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்தவர்களை பிடித்த போலீசார் அவர்களை நாள் முழுவதும் அமர்த்தி போக்குவரத்து விதிகள் தொடர்பான விழிப்புணர்வு வகுப்பை நடத்தினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை மாநகரில் இருசக்கர வாகனங்களில் பயணிப்போர் 100 சதவீதம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி போலீசார் மற்றும் தன்னார்வ அமைப்புகள் பல்வேறு விழிப்புணர்வை நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருகின்றனர். இதனிடையே கோவை மாநகர போலீசார் தலைக்கவசம் அணியாமல் செல்பவர்களை ஒரு நாள் முழுக்க அமர்த்தி அவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வகுப்பு எடுக்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தனர்

இந்நிலையில், வாகன தணிக்கை நடத்திய போலீசார் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்து இளைஞர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் அவர்களை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள சாலை போக்குவரத்து பயிற்சி வகுப்பிற்கு அழைத்துச் செல்லப்பட்டு சாலைபாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வகுப்பு எடுத்தனர். இதேபோல் தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டி வரும் வாகன ஓட்டிகள் மீது, மோட்டார் வாகன சட்டப்படி வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு, அந்நபர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி, பாதுகாப்பான பயனத்தை உறுதி செய்வதற்கான பயிற்சி வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 27ம் தேதி காலை முதல் மாலை வரை கோவை மாநகரில் 15 இடங்களில் வாகன பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவ்வாகன பரிசோதனையில் தலைக்கவசம் அணியாமல் வந்த 1282 பேரில் 937 பேர் மீது போக்குவரத்துச் சட்ட விதிகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டன. 345 நபர்கள் எச்சரித்து அனுப்பப்பட்டனர். மேலும், வாகன பரிசோதனை நடைபெற்ற 15 இடங்களிலும் சேர்ந்து தலைக்கவசம் அணியாது வந்த 1282 பேர் மற்றும் தலைக்கவசம் அணிந்து வந்த 2543 நபர்கள், என மொத்தம் 3875 நபர்களுக்கு போக்குவரத்து சட்ட விதிகள் பற்றியும், இருசக்கர வாகனங்களில் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வது பற்றிய விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Coimbatore, Local News