ஹோம் /கோயம்புத்தூர் /

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு முகாம்- விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு முகாம்- விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பெண்களுக்கு டாடா நிறுவனம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி நடைபெறுகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Coimbatore, India

  இந்தியாவில் 75-வது சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பாரதியாா் பல்கலைக்கழகத்தில் வேலை வழிகாட்டி துறை மற்றும் பல்கலைக்கழக நிா்வாக கூட்டமைப்பு இணைந்து பெண்களுக்கான வேலை வாய்ப்பு முகாமை ஆகஸ்ட் 14ம் தேதி நடத்துகிறது.

  ஒசூரில் செயல்பட்டு வரும் டாடா மின்னணு நிறுவனம் சாா்பில் 12ம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவிகளுக்கு இந்த வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

  இதில், மாணவிகளுக்கு ஓசூா் டாடா நிறுவனத்தில் 12 நாள்கள் சி.என்.சி லேத், நுண்ணிய எலக்ட்ராட்னிக்ஸ் பிரிவில் இலவசமாக பயிற்சியளிக்கப்படும். பணியமர்த்தப்படுபவா்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளம், பி.எப் மருத்துவக் காப்பீடு, ஆண்டுதோறும் மருத்துவப் பரிசோதனை, குறைந்த செலவில் தரமான உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்படும்.

  இதில் பங்கேற்கும் பெண்கள் 2021 மற்றும் 2022 ம் ஆண்டுகளில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 20 வயதுக்குள் இருக்க வேண்டும். இம்முகாமில் பங்கேற்பவா்கள் 2 புகைப்படம், 12-ம் மதிப்பெண் சான்றிதழ், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை கொண்டுவர வேண்டும். பங்கேற்க விரும்புவோர் இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Karthick S
  First published:

  Tags: Coimbatore, Local News