காட்டுயானைகள் நடமாட்டம் காரணமாக, கோவை மாவட்டம் வால்பாறை அருகே அட்டக்கட்டி பகுதியில் உள்ள சின்னகல்லாறு அருவிக்குச் செல்ல வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். இந்த தடை ஓராண்டுக்கு பிறகு நீக்கப்பட்டுள்ளது இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதி, மிகச்சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு பசுமை நிறைந்த தேயிலை தோட்டங்கள், சில்லென மோதிச்செல்லும் மேகக்கூட்டங்கள், அடர்ந்த வனப்பகுதிகள் போன்ற காட்சிகளை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
தற்போது வால்பாறை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில், சின்ன கல்லாறு அருவி இருக்கும் பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகளவில் இருந்ததால், கடந்த ஆண்டு சுற்றுலா பயணிகளுக்கு மானாம்பள்ளி வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் சின்ன கல்லாறு அருவிக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் வனத்துறையினரை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்நிலையில், அங்கே புதர் செடிகளை வெட்டி அகற்றும் பணி நடைபெற்றது. அத்துடன், வேட்டை தடுப்பு காவலர்கள் கூடுதலாக பணியமர்த்தப்பட்டனர். இதைத்தொடர்ந்து சின்ன கல்லாறு அருவிக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு மானாம்பள்ளி வனத்துறையினர் அனுமதி வழங்கினர். இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
Must Read : திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் - பார்த்து என்ஜாய் பண்ணுங்க!
இந்த சின்ன கல்லாறு அருவிக்குச் செல்ல சிங்கோனா வனத்துறை சோதனைச்சாவடியில் ஒரு நபருக்கு 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அங்குள்ள தூரிப்பாலத்தின் மீது நடந்து செல்ல பலரும் விரும்புகின்றனர். ஆனால், அந்த பாலம் சேதம் அடைந்துள்ளது. எனவே, அந்த தூரி பாலத்தை சீரமைக்கும் ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Falls, Local News, Tourist spots