ஹோம் /கோயம்புத்தூர் /

கோவை மாவட்ட மக்கள் கவனத்திற்கு..! நாளை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது...

கோவை மாவட்ட மக்கள் கவனத்திற்கு..! நாளை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது...

கோவை

கோவை

Kovai News : கோவை மாநகராட்சியில் மேயர் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்ப்பு கூட்டம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நாளை மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கோவை மாநகராட்சியின் பிரதான அலுவலகத்தில் நாளை(27.12.2022) காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது.

மாநகராட்சிக்குட்பட்ட பகுதியிலுள்ள பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்து பயன்பெறலாம்.

மேலும், இக்கோரிக்கை மனுக்களின் மீது துறைசார்ந்த மாநகராட்சி அலுவலர்களால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, இந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, கிருமிநாசினி பயன்படுத்தி, சமூக இடைவெளியை கடைபிடித்து தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

செய்தியாளர் : சவுந்தர்மோகன் - கோவை

First published:

Tags: Coimbatore, Local News