ஹோம் /கோயம்புத்தூர் /

கோவை மாநகராட்சியில் நாளை பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்..

கோவை மாநகராட்சியில் நாளை பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்..

கோவை

கோவை

Coimbatore News : கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நாளை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் கூறியிருப்பதாவது, கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.

எனவே, மாநகராட்சிக்குட்பட்ட பகுதியிலுள்ள பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்து பயன்பெறலாம்.

இதையும் படிங்க : கோவை வழியாக இயக்கப்படும் பல்வேறு ரயில்கள் ரத்து.. வழித்தடத்தில் மாற்றம்  - தெற்கு ரயில்வே அறிவிப்பு

மேலும், இக்கோரிக்கை மனுக்களின் மீது துறைசார்ந்த மாநகராட்சி அலுவலர்களால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, இந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, கிருமிநாசினி பயன்படுத்தி, சமூக இடைவெளியை கடைபிடித்து தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம். இவ்வாறு மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Coimbatore, Local News