ஹோம் /கோயம்புத்தூர் /

பள்ளி அருகே மின் மயானமா.? கொதிக்கும் கோவை மக்கள்

பள்ளி அருகே மின் மயானமா.? கொதிக்கும் கோவை மக்கள்

கோவை

கோவை

Coimbatore Latest News | கோவை-பொள்ளாச்சி சாலையில் உள்ள ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் சுமார் 1,600 ஆண்டு கால பழமைவாய்ந்த அருள்மிகு ஈஸ்வரன் திருக்கோவில், 1,350 ஆண்டுகள் பழமையான பெருமாள் கோவில் மற்றும் 500 ஆண்டுகள் பழமையான அங்காளம்மன் திருக்கோவில் உள்ளிட்டவை அடுத்தடுத்து அமைந்துள்ளன.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

பழங்கால கோவில்கள் மற்றும் பள்ளிக்கூடம் இருக்கும் பகுதியில் மின் மயானம் அமைக்கக்கூடாது என்று வலியுறுத்து கோவையைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை-பொள்ளாச்சி சாலையில் உள்ள ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் சுமார் 1,600 ஆண்டு கால பழமைவாய்ந்த அருள்மிகு ஈஸ்வரன் திருக்கோவில், 1,350 ஆண்டுகள் பழமையான பெருமாள் கோவில் மற்றும் 500 ஆண்டுகள் பழமையான அங்காளம்மன் திருக்கோவில் உள்ளிட்டவை அடுத்தடுத்து அமைந்துள்ளன.

இவற்றிற்கு அருகில் தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்றும் செயல்பட்டு வருகின்றது. இந்த பகுதியில் ஏற்கனவே மயானம் ஒன்று உள்ளது. அந்த மயானத்தை ஒரு கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பித்து மின் மயானம் அமைக்க ஒத்தக்கால்மண்டபம் பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:  வால்பாறைக்கு சுற்றுலா போறீங்களா? உஷார்... வனத்துறை எச்சரிக்கை.!

இந்த தீர்மானத்திற்கு எதிராக அப்பகுதி மக்கள் மாவட்ட ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இதனிடையே அண்மையில் அங்கு நில அளவை செய்யப்பட்டு முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

இந்த மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் திரண்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திடீர் முற்றுகையில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், \"நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோவில்கள் மற்றும் பள்ளி ஆகியவை அடுத்தடுத்து இருந்தும் அதன் அருகே மின் மயானம் அமைப்பது கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே இங்கு மயானம் உள்ளது.

தற்போது மின் மயானம் வந்தால் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இருந்து சடலங்கள் இங்கேயே எரியூட்ட கொண்டுவரப்படும். இதனால் மாணவ மாணவிகளும், கோவிலுக்கு வரும் பக்தர்களும் பாதிக்கப்படுவார்கள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஏற்கனவே பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கும் செல்லும் பேருந்துகள் ஒத்தக்கால்மண்டபம் பேருந்து நிறுத்தத்திற்கு வராமல் மேம்பாலம் ஏறி செல்வதால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வரும் சூழலில் மின் மயானம் நெடுஞ்சாலைக்கு அருகிலேயே அமைந்தால் போக்குவரத்து பாதிக்கப்படும்.\" என்றனர்.

Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News