ஹோம் /கோயம்புத்தூர் /

800 கடைகள் கொண்ட கோவையின் ஷாப்பிங் சொர்க்கம் ‘உப்புக்கிணறு சந்து’.. இங்கு மலிவு விலையில் இத்தனை பொருட்கள் வாங்கலாமா..!

800 கடைகள் கொண்ட கோவையின் ஷாப்பிங் சொர்க்கம் ‘உப்புக்கிணறு சந்து’.. இங்கு மலிவு விலையில் இத்தனை பொருட்கள் வாங்கலாமா..!

கோவை

கோவை ‘உப்புக்கிணறு சந்து’

Coimbatore Uppukinaru Sandhu | கோவை டவுன்ஹாலில் தர்கா அருகே வலதுபுறத்தில் அமைந்துள்ளது உப்புக்கிணறு சந்து. சிறிய சந்திற்குள் அமைந்துள்ள இது கோவையின் மிகப்பெரிய ஜவுளி மார்க்கெட் என்று கூறலாம். இங்கு சுமார் 800 கடைகள் உள்ளன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

கோவை மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஒரு பெரிய ஜவுளி கடல் தான், இந்த சிறிய 'உப்பு கிணறு சந்து'. இங்கு சுமார் 800 கடைகள் இருக்கிறது. நடுத்தர மற்றும் ஏழை மக்களின் டவுன் ஹால் பற்றி தற்போது தெரிந்து கொள்வோம்.

கடந்த 20 ஆண்டுகளில் கோவை மாநகரம் அபார வளர்ச்சி பெற்றுவிட்டது என்று கூறிவிட முடியும். 10 ஆண்டுகளுக்கு முன்பு காடு மேடுகளாய் இருந்த பல பகுதிகள் இன்று பல அடுக்குமாடிகள் கொண்ட குடியிருப்புகளாக மாறியுள்ளன.

கோவையின் வளர்ச்சி நிலப்பரப்பில், மட்டுமல்லாது கோவையில் வசிக்கும் மக்களிடையேயும் பிரதிபலிக்கிறது. தாரளமாக செலவு செய்யும் மனப்பான்மையும், வாங்கும் பொருளுக்காக அல்லாமல், வாங்கும் இடத்தை பொறுத்து அதற்கு அந்தஸ்தை நிர்ணயிக்கும் மனப்பான்மையும் அதிகமாகவே வளர்ந்துள்ளது என்று கூறலாம்.

மேலும் படிக்க: கோவை குருந்தமலையில் உருவான ஹிட் திரைப்படங்களின் லிஸ்ட்- மனதை கொள்ளை கொள்ளும் இடம்!

இதனாலேயே பல சிறு வியாபாரிகள் நொடிந்து போயுள்ளனர். அப்படியாக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் படு பிசியாக இயங்கி வந்த இடம் தான் டவுன்ஹால் பகுதியில் உள்ள உப்புக்கிணறு சந்து.

உப்புக்கிணறு சந்து, கோவை

இன்று கோவை டவுன்ஹாலில் பல பெரிய ஜவுளிக் கடைகளும், நகைக்கடைகளும் உள்ளன. ஆனால் முதலில் இங்கு கால் பதித்தவர்கள் சிறு வியாபாரிகள் தான். டவுன்ஹாலில் தர்கா அருகே வலதுபுறத்தில் அமைந்துள்ளது உப்புக்கிணறு சந்து.

மேலும் படிக்க:  திருச்சிக்கு நடுவில் இப்படி ஒரு அருவி இருக்கா?! - செலவே இல்லாமல் ஆனந்த குளியலுக்கு ஏற்ற சுற்றுலா தலம்!

சிறிய சந்திற்குள் அமைந்துள்ள இது கோவையின் மிகப்பெரிய ஜவுளி மார்க்கெட் என்று கூறலாம். இங்கு சுமார் 800 கடைகள் உள்ளன.இதில் பெரும்பாலான கடைகள் ஜவுளிக்கடைகள் தான். குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என அனைத்து தரப்பு மக்களுக்குமான ஆடைகள் இங்கு கிடைக்கின்றன. இது தவிர கவரிங் கடைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், பிளாஸ்டிக் சாமானங்கள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன.

உப்புக்கிணறு சந்து, கோவை

எளிய மக்களுக்காக குறைந்த விலையில் இங்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பல ஆயிரம் கொடுத்து நாம் பெரிய கடைகளில் வாங்கும் ஜவுளிப்பொருட்களை உப்புக்கிணறு சந்திற்கு சென்றால் சில நூறு ரூபாயில் வாங்கிவிடலாம்.

மேலும் படிக்க :  இந்த தெருவுக்குள்ள நுழைஞ்சாலே மிரண்டு போவீங்க..! மதுரை 10 தூண் சந்து சிறப்புகள்..!

பெரிய கடைகளிலும், ஆன்லைனிலும் வாங்கினால் தான் அந்தஸ்து என்ற மனப்பான்மை இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து வருவதால், உப்புக்கிணறு சந்திற்கு வாடிக்கையாளர்கள் வருகைகுறைந்துவிட்டது.

உப்புக்கிணறு சந்து, கோவை

தீபாவளியோடு வியாபாரம் கணிசமாகக் குறைந்துவிட்டதாகவும், மக்கள் பெரும்பாலும் பெரிய கடைகளையும், ஆன்லைன் ஷாப்பிங்கையுமே தேர்வு செய்வதாகவும்உப்புக்கிணறு சந்து வியாபாரிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

முழுக்க முழுக்க கோவை மக்களை சார்ந்து வாழ்பவர்களே உள்ளூர் வியாபாரிகள். பெரிய வணிக நிறுவனங்கள் பெரிய லாபத்திற்காக வணிகம் செய்கின்றன. ஆனால் இந்த வியாபாரிகள் அன்றைய சாப்பாட்டிற்கும், அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யவே வியாபாரம் செய்கின்றனர். இதை அனைவரும் உணர்ந்தால் சிறு தொழிலும், சிறு வியாபாரங்களும் மீண்டும் உயிர்பெறும் என்பதில் மாற்றுக்கருத்துஇல்லை..

Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News