முகப்பு /கோயம்புத்தூர் /

முயன்றால் சாதிக்க முடியும்.. தத்ரூபமான ஓவியங்கள் வரைந்து அசத்தும் கோவை மாற்றுத்திறனாளி இளம்பெண்..

முயன்றால் சாதிக்க முடியும்.. தத்ரூபமான ஓவியங்கள் வரைந்து அசத்தும் கோவை மாற்றுத்திறனாளி இளம்பெண்..

ஓவியங்கள் வரைந்து அசத்தும் இளம்பெண்

ஓவியங்கள் வரைந்து அசத்தும் இளம்பெண்

Pencil Drawing : பென்சில் டிராயிங் முறையில் உயிரோவியங்களை வரைந்து அசத்தி வருகிறார் கோவையை சேர்ந்த காது கேளாத வாய் பேச இயலாத இளம்பெண்.

  • Last Updated :
  • Coimbatore, India

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அப்துல்லா மற்றும் அனீஸ்பாத்திமா தம்பதிக்கு 2 மகள் மற்றும் ஒரு மகன் என 3 பேர் உள்ளனர். இவர்களுள், மூத்த மகள் அப்ரா சாலிகாவுக்கு பிறவியிலேயே காது கேட்காது மற்றும் வாய் பேசவும் முடியாது. இதனை ஒரு குறையாகவே பொருட்படுத்தாத அப்ரா சாலிகாவின் பெற்றோர், தங்கள் மகளுக்கு எதில் ஆர்வமோ அதனை ஊக்குவித்து அன்பு பாராட்டி வளர்த்தனர்.

ஓவியம் வரைந்து அசத்தும் அப்ரா சாலிகா

மேலும் கேட்பது, பேசுவது என ஓசைகள் அறிந்தால் மட்டும்தான் ஒருவரால் சாதிக்க முடியுமா என்ன? இதையெல்லாம் மாற்றி கண்களால் காண்பதை ஓவியங்களாக வரைந்து அதற்கு உயிரூட்டி அசர வைக்கிறார் இந்த பெண். தன்னம்பிக்கையுடன் பென்சில் ட்ராயிங் முறையில் காண்போரை வியப்பில் ஆழ்த்தும் ஓவியங்களை தீட்டுகிறார். ஒருவரது புகைப்படத்தை அவரது செல்போனுக்கு அனுப்பினால் அதனை சில நிமிடங்களில் காகிதத்தில் நகல் எடுத்தது போல் ஓவியமாக வரைந்து விடுகிறார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதுகுறித்து அவரது பெற்றோர் கூறுகையில், “சிறு வயதிலிருந்து ஓவியம் வரைவதில் மிகவும் ஆர்வம் காட்டி வந்த அப்ரா சாலிகா தற்போது மிகவும் தத்ரூபமாக ஓவியம் வரைந்து வருகிறார். இவரது முயற்சிகளுக்கு தங்களால் இயன்ற வரை ஊக்குவித்து வருகிறோம்” என தெரிவித்தனர். மேலும் தனக்கு மிகவும் உறுதுணையாக தனது பெற்றோர்கள் இருந்து வருவதாக அப்ரா சாலிகா சைகை மொழியில் தெரிவித்தார்.

top videos
    First published:

    Tags: Coimbatore, Local News