கோவை அரசு மருத்துவமனையில் சிறுநீரகவியல் துறையில் ஆர்.ஓ யூனிட்டுகள் செயல்படாததால் டயாலிசிஸ் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் தரையில் படுத்தபடி காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் சிறுநீரகவியல் துறை செயல்பட்டு வருகிறது. இங்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்ட நோயாளிகள், டயாலிசிஸ் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். நாளொன்றுக்கு 50 பேர் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளும் இந்த நோயாளிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இதற்காக மருத்துவமனை வளாகத்தில் ஆர்.ஓ. யூனிட் எனப்படும் தண்ணீர் சுத்திகரிக்கும் கருவிகள் உள்ளன.
இதையும் படிங்க : தென்னை தோப்பிற்குள் புகுந்த 12 அடி நீள பாம்பு.. வைரலாகும் வீடியோ
இங்குள்ள இரண்டு ஆர்.ஓ. யூனிட்டுகளில் ஒன்று முற்றிலும் பழுதடைந்துள்ளது. மற்றொரு ஆர்.ஓ. யூனிட், சரிவர செயல்படவில்லை. இதனால் குறித்த நேரத்தில் டயாலிசிஸ் சிகிச்சை செய்ய முடிவதில்லை. 50 பேருக்கு சிகிச்சை அளிக்கும் இடத்தில் 20 பேர் வரை மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனால் நோயாளிகள் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்டவர்கள் சிறுநீரகவியல் துறையின்வெளியில் கட்டாந்தரையில் படுத்தபடி சிகிச்சைக்காக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு நாற்காலி படுக்கை வசதிகள் செய்து தரப்படவில்லை.
இதுகுறித்து நோயாளிகளின் உறவினர்கள் கூறுகையில், 'கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இந்த நிலை நீடித்து வருகிறது. டயாலிசிஸ் சிகிச்சை என்பது சிறுநீரக கோளாறு ஏற்பட்டவர்களுக்கு கட்டாயம் செய்யப்பட வேண்டிய ஒன்று. குறித்த நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் நோயாளியின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்ற நிலையில் கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் இதில் அலட்சிய போக்கை கடைபிடிப்பது ஏற்புடையதல்ல" என்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதுகுறித்து மருத்துவமனை டீன் கூறுகையில், 'ஆர்.ஓ. யூனிட் பிரச்சனை தொடர்பாக புகார் வந்துள்ளது. அதை சரி செய்து உடனடியாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Local News