Home /coimbatore /

Coimbatore : மருத்துவமனைக்குள் நுழைய முடியாமல் திணறும் ஆம்புலன்ஸ் வாகனங்கள்.. முறையற்ற பார்க்கிங்.. போக்குவரத்து நெரிசலால் அவலம்..

Coimbatore : மருத்துவமனைக்குள் நுழைய முடியாமல் திணறும் ஆம்புலன்ஸ் வாகனங்கள்.. முறையற்ற பார்க்கிங்.. போக்குவரத்து நெரிசலால் அவலம்..

கோவை

கோவை

Coimbatore District : முறையற்ற பார்க்கிங்.. போக்குவரத்து நெரிசல்.. கோவை அரசு மருத்துவமனைக்குள் நுழைய முடியாமல் திணறும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் குறித்த செய்தி தொகுப்பு..

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
கோவை அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான உள் மற்றும் வெளி நோயாளிகள் வந்து செல்கின்றனர். கோவை மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களான திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்தும் கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் மக்கள் இங்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

ஆம்புலன்ஸுக்கே வழியில்லை..


கோவை அரசு மருத்துவமனையானது திருச்சி சாலையில் அமைந்துள்ளது. இங்கு சாலையும் குறுகலாக இருப்பதால் அவ்வப்போது வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் வாகனங்களை மருத்துவமனை நிர்வாகம், மருத்துவமனைக்குள் அனுமதிப்பதில்லை.

கோவை அரசு மருத்துவமனை : முறையற்ற பார்க்கிங்..


இதனால் வாகனங்கள் அந்த குறுகலான சாலையின் ஓரத்தில் நிறுத்தப்படுகின்றன. முறையில்லாமல் பார்க்கிங் செய்வதால் மருத்துவமனை வளாகம் முன்பு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் குறித்த நேரத்திற்குள் மருத்துவமனைக்குள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கோவை மாநகராட்சி நிர்வாகமும், மருத்துவமனை நிர்வாகமும் இணைந்து உடனடியாக இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News

அடுத்த செய்தி