Home /coimbatore /

Coimbatore : கல்விக்காக கடனாளி ஆகும் பெற்றோர்.. நகைகளை விற்று கல்வி கட்டணம் செலுத்தும் அவலம்.!

Coimbatore : கல்விக்காக கடனாளி ஆகும் பெற்றோர்.. நகைகளை விற்று கல்வி கட்டணம் செலுத்தும் அவலம்.!

நகைகளை

நகைகளை விற்று கல்வி கட்டணம் செலுத்தும் அவலம்.!

Coimbatore District : கோவையில் கடந்த 10 நாட்களுக்குள் மட்டும் பொதுமக்கள் தங்கள் சேமிப்பாக வைத்திருந்த ரூ.50 கோடி மதிப்பிலான தங்க நகைகளை விற்பனை செய்துள்ளனர். கல்விக் கட்டணம் செலுத்த பெற்றோர் தங்களின் சேமிப்பை தாரைவார்த்து வருவது குறித்து தற்போது காணலாம்..

மேலும் படிக்கவும் ...
கோடை விடுமுறை முடிந்து தங்கள் குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்ல துவங்கும் காலம் நடுத்தர குடும்பத்து பெற்றோர் படும் துயரத்திற்கு அளவே இல்லை என்று கூறலாம். தனியார் பள்ளிகளில் படிக்கும் தங்கள் குழந்தைகளுக்கு கல்வி கட்டணத்தை திரட்டுவது எப்படி? என்ற சிந்தனையே இந்த காலகட்டத்தில் பெற்றோர் மனதில் இருக்கும்.

தெரிந்தவர்களிடமும், சிறு நிதி நிறுவனங்களிடமும் வட்டிக்கு பணம் வாங்கும் பெற்றோர் எப்பாடுபட்டாவது தங்கள் குழந்தைகளின் கல்வி (கடனை) கட்டணத்தை செலுத்துகின்றனர். இந்த நிலையில், பள்ளிகள் திறப்புக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே தங்கள் சேமிப்பாக வைத்த நகைகளை விற்பனை செய்தும் அடகு வைத்து நிதி ஆதாரங்களை திரட்டி வருகின்றனர்.

பள்ளியில் குழந்தைகள்..


கோவையில் கடந்த 10 நாட்களுக்குள் மட்டும் பொதுமக்கள் தங்கள் சேமிப்பாக வைத்திருந்த ரூ.50 கோடி மதிப்பிலான தங்க நகைகளை விற்பனை செய்துள்ளனர். இது தவிர அடகு வைத்து கடன் வாங்கியவர்களும் உள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதுகுறித்து கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முத்து வெங்கட்ராமன் கூறுகையில், "கொரோனாவின் தாக்கத்தால் வீழ்ச்சியடைந்த பொருளாதாரம் மெல்ல மெல்ல சம நிலையை அடைந்து வரும் நிலையில், பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. கல்வி கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதால் மக்கள் தங்கள் சேமிப்பாக வைத்திருந்த நகைகளை விற்பனை செய்து வருகின்றனர். வழக்கமாக நடக்கும் விஷயம் தான் இது என்றாலும் இந்தாண்டு அதிக அளவில் தங்கம் விற்பனையாகியுள்ளது.

தங்க நகைகள்


கோவையில் கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான தங்கத்தை விற்பனை செய்துள்ளனர். புதிய நகைகள் விற்பனை 30 சதவீதம் மட்டுமே உள்ளது. இது தற்காலிக நிலை தான். மீண்டும் தங்கம் விற்பனை அதிகரிக்கும்." என்றார்.

நகைக்கடை..


இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், " நீண்ட விடுமுறைக்கு பின் தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் துவங்கியுள்ளன. தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் சேமித்து வைத்த நகைகளை விற்பனை செய்கிறோம். தமிழக அரசு கல்விக்கான கட்டணத்தை நிர்ணயித்தது, எந்தப் பள்ளியும் ,கல்லூரியும் அதனை கடைபிடிப்பதில்லை இதை தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும் என்றனர்.
Published by:Arun
First published:

Tags: Coimbatore, Education, Local News

அடுத்த செய்தி