முகப்பு /கோயம்புத்தூர் /

கோவையில் இலவச கல்வி திட்டம் வேண்டி குழந்தைகளுடன் போராட்டம் நடத்திய பெற்றோர்...

கோவையில் இலவச கல்வி திட்டம் வேண்டி குழந்தைகளுடன் போராட்டம் நடத்திய பெற்றோர்...

X
போராட்டத்தில்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குழந்தைகள்

Coimbatore News|இலவச கல்வி திட்டம் வேண்டி குழந்தைகளுடன் வந்து போராட்டம் நடத்திய பெற்ரோர்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

தனியார் பள்ளியில் கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் இலவச சீட் வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர்கள் குழந்தைகளுடன் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர்.

கோவை கணபதி மாநகர் பகுதியில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வந்தது. கடந்த ஆண்டு இந்த பள்ளி எவ்வித முன்னறிவிப்புமின்றி பள்ளி மூடப்பட்டதால் அப்பள்ளியில் 28 குழந்தைகள் அரசின் இலவச கல்வி திட்டத்தின் கீழ் படித்து வந்தனர்.

இந்நிலையில் பள்ளி மூடப்பட்டதால் குழந்தைகளின் பெற்றோர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் முறையிட்டிருந்தனர். அப்போது தங்கள் குழந்தைகளை எந்த பள்ளிகளில் வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளுங்கள் எனவும் அங்கு இலவச கல்வி திட்டத்தின் கீழ் குழந்தைகள் பயில நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததாக பெற்றோர்கள் கூறியிருந்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாகியும் இலவச கல்வி திட்டத்தின் கீழ் குழந்தைகள் பயில்வதற்கு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் குழந்தைகளை படிக்க வைப்பதற்கு மிகவும் சிரமப்படுவதாகவும் மீண்டும் பெற்றோர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். மனு அளிக்க குழந்தைகளுடன் வந்த பெற்றோர்கள் பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர். இதனால் உடனடியாக மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

First published:

Tags: Coimbatore, Local News