முகப்பு /கோயம்புத்தூர் /

பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் - கோவை-திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு 

பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் - கோவை-திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு 

 சிறப்பு ரயில்

 சிறப்பு ரயில்

Palani Murugan Temple | பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூசம் திருவிழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக கோவை-திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

பழனியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் நாளை (ஜனவரி 27ம் தேதி வெள்ளிக்கிழமை) காலை குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் நடைபெறும் இவ்விழாவை காண பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் செல்லவுள்ளனர்.

இந்நிலையில், பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூசம் திருவிழாவையொட்டி, கோவை-திண்டுக்கல் இடையே பக்தர்களின் வசதிக்காக முன்பதிவு வசதியில்லாத சிறப்பு ரயில் நாளை (வெள்ளிக் கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) மற்றும் 29ஆம் தேதி (ஞாயிற்று கிழமை) ஆகிய நாட்களிளும், வருகிற பிப்ரவரி 4,5 மற்றும் 6 ஆகிய தேதிகளிலும் இயக்கப்படுகிறது.

இந்த ரயில் பொள்ளாச்சி, உடுமலை, பழனி வழியாக இயக்கப்படுகிறது. இந்த கோவை-திண்டுக்கல் சிறப்பு ரயில் மேற்கண்ட தேதிகளில் காலை 9.20 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு திண்டுக்கல் சென்றடையும். போத்தனூருக்கு 9.32 மணிக்கும், கிணத்துக்கடவுக்கு 9.52 மணிக்கும், பொள்ளாச்சிக்கு 10.15 மணிக்கும் வரும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதேபோல, கோமங்கலத்துக்கு 10.46 மணிக்கும், உடுமலைக்கு 11 மணிக்கும், மைவாடி ரோடுக்கு 11.09 மணிக்கும், மடத்துக்குளத்துக்கு 11.15 மணிக்கும், புஷ்பத்தூருக்கு 11.23 மணிக்கும், பழனிக்கு 11.43 மணிக்கும் சென்று சேரும்.

Must Read : காஞ்சி நகரில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் - ரசித்து சுற்றிப்பார்க்க ஒருநாள் போதாது!

மறு மார்க்கத்தில், திண்டுக்கல்-கோவை சிறப்பு ரயில் மேற்கண்ட தேதிகளில் திண்டுக்கல்லில் மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு கோவை சென்றடையும். இந்த ரயில் பழனிக்கு மதியம் 3 மணிக்கும், புஷ்பத்தூருக்கு 3.16 மணிக்கும், மடத்துக்குளத்துக்கு 3.19 மணிக்கும், மைவாடி ரோட்டுக்கு 3.24 மணிக்கும், உடுமலைக்கு 3.34 மணிக்கும், கோமங்கலத்துக்கு 3.48 மணிக்கும், பொள்ளாச்சிக்கு மாலை 4.20 மணிக்கும், கிணத்துக்கடவுக்கு 4.44 மணிக்கும், போத்தனூருக்கு 5.10 மணிக்கும் சென்றுசேரும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Coimbatore, Local News, Palani Murugan Temple, Train