இன்றைய காலகட்டத்தில் ஓ.டி.டி தளங்கள் தவிர்க முடியாத இடத்தை பிடித்து வருகின்றன. சிறிய பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்காது என்ற நிலையை இத்தகைய தளங்கள் மாற்றியுள்ளன.
இளம் படைப்பாளர்கள், குறும்படங்களை தயாரிக்கும் மாணவர்களுக்கு இத்தகையை ஓ.டி.டி தளங்கள் வாய்ப்புகளை வழங்கி வருகின்றன. இந்த சூழலில், ஓ.டி.டி தளங்களில் தங்களது படைப்புகளை எப்படி கொண்டு சேர்ப்பது, கதையை சமர்ப்பிக்கும் போது எந்த முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்த சந்தேகங்கள் மாணவர்கள் மற்றும் இளம் படைப்பாளர்கள் மத்தியில் உள்ளது. இதுகுறித்து 'ஆஹா' ஓ.டி.டி தளத்தின் நிர்வாகி ஸ்ரீ ரஞ்சினி விளக்கமளித்துள்ளார்.
ஓ.டி.டி தளங்களில் எப்படி நமது கதைகளை கொடுப்பது என்பது பலருக்கு தெரிவதில்லை. சென்னை போன்ற தலை நகரங்களில் நட்பு வட்டாரங்கள் மூலமாக படைப்பாளர்கள் ஓ.டி.டி தளங்களை தொடர்பு கொண்டுவிடுகின்றனர். ஆனால் மற்ற ஊர்களில் உள்ள படைப்பாளர்கள் பலருக்கு இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை.
பொதுவாக ஓ.டி.டி தளங்கள் இப்போது மண் சார்ந்த கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். ஆஹா தளத்தில் நாங்கள் மக்கள் மத்தியில் பிரபலமடைய இந்த முறையை தான் கடைபிடிக்கிறோம். இணையதள தொடர்கள் மற்றும் திரைப்படங்களை தயாரிக்க நாங்கள் தயாரிக்கிறோம்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
ஓ.டி.டி தளங்களில் ஒரு படத்தை கொடுக்கும் போது 100 முதல் 120 நிமிடங்கள் அந்த படம் இருக்க வேண்டும். முதல் 5 நிமிடங்களுக்குள் பார்வையாளர்களை ஈர்த்திட வேண்டும்.ஓ.டி.டி நிறுவனத்தில் ஒரு கதையை சர்ப்பிக்கும் போது 'லாக் லைன்' எழுத வேண்டும் என்றும் கதையின் கருவை கூறுவது தான் இது. இதனை தொடர்ந்து கதை சுருக்கத்தை சமர்ப்பிக்க வேண்டும். அதில் கதை, கதாபாத்திரங்கள், கலர், குறித்து தெளிவுபடுத்தி இருக்க வேண்டும் என்றார்.
கதை தேர்வு செய்யப்பட்டால், படம் தயாரிப்பதற்கு எங்கள் சார்பில் ஒரு நபரை நிர்வகித்து, படம் தயாரிப்பு பணிகள் துவங்கும். தற்போது நல்ல கதைகளை தேடி வருகின்றோம். படைப்பாளர்கள் தங்களது கதை சுருக்கத்தை creatorsconnect@arhamedia.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் என ஸ்ரீரஞ்சினி கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Local News, OTT Release