ஹோம் /கோயம்புத்தூர் /

முதல் விமான பயணம் செய்த ஆதரவற்ற குழந்தைகள்.. கோவையில் கிடைத்த மறக்க முடியாத அனுபவம்..

முதல் விமான பயணம் செய்த ஆதரவற்ற குழந்தைகள்.. கோவையில் கிடைத்த மறக்க முடியாத அனுபவம்..

கோவையில்

கோவையில் கிடைத்த மறக்க முடியாத அனுபவம்..

Coimbatore News | ஆதரவற்ற குழந்தைகளின் முதல் விமான பயணம்..  கோவைக்கு சுற்றுலா வந்தது வாழ்வில் மறக்கமுடியாது என்று நெகிழ்ச்சி..!

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

சென்னையை சேர்ந்த ஆதரவற்றோர் இல்லத்தில் வசிக்கும் சிறுமிகள் முதல் முறையாக விமானத்தில் கோவைக்கு அழைத்துவரப்பட்டதால் அவர்கள் மகிழ்ச்சியடைந்தூள்ளனர்.

சென்னையில் எஸ்.ஆர்.எஸ் சர்வோதயா இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் ஆதரவற்ற குழந்தைகள் தங்கி படித்து வருகின்றனர்.

இவர்களை முதன் முறையாக விமானத்தில் அழைத்துச்செல்ல கோயம்புத்தூரைச் சேர்ந்த மூன்று தன்னார்வ அமைப்புகள் முயற்சி எடுத்தன.

மேலும் படிக்க:  கோவை குருந்தமலையில் உருவான ஹிட் திரைப்படங்களின் லிஸ்ட்- மனதை கொள்ளை கொள்ளும் இடம்!

அதன்படி சென்னையில் இருந்து 15 சிறுமிகள் விமானத்தில் கோவைக்கு அழைத்து வரப்பட்டனர். முதன் முறையாக விமானத்தில் பறந்த குழந்தைகள் மகிழ்ச்சியடைந்தனர். அதோடு, குழந்தைகளுக்கு விமானியின் அறை, விமானம் பறக்கும் முறைகளும் விளக்கப்பட்டன.

முதல் விமான பயணம் மேற்கொண்ட மகிழ்ச்சியில் மாணவிகள்..

விமானத்தில் கோவை வந்தடைந்த சிறுமிகள் அவினாசி சாலையில் உள்ள ஜி.டி அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து அவினாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

மேலும் படிக்க:   திருச்சிக்கு நடுவில் இப்படி ஒரு அருவி இருக்கா?! - செலவே இல்லாமல் ஆனந்த குளியலுக்கு ஏற்ற சுற்றுலா தலம்!

தொடர்ந்து ஈஷா யோக மையம் மற்றும் ஆதியோகி சிலையை காண குழந்தைகள் அழைத்துச் செல்லப்பட்டனர். கோவையின் பெரும்பாலான இடங்களை சுற்றுப்பார்த்த அவர்களுக்கு இரவு உணவு, நட்சத்திர விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் 8 மணியளவில் கோவை விமான நிலையம் சென்ற சிறுமிகள் அங்கிருந்து விமானம் மூலமாக சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.

முதல் விமான பயணம் மேற்கொண்ட மகிழ்ச்சியில் மாணவிகள்..

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

முதன் முறையாக விமானத்தில் பறந்ததோடு, கோவையையும் சுற்றிப்பார்த்தது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், நண்பர்களுடன் நடைபெற்ற இந்த நிகழ்வு வாழ்வில் நீங்கா இடம் பிடிக்கும், மறக்கமுடியாது என்றும் சிறுமிகள்தெரிவித்தனர்

Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News