ஹோம் /கோயம்புத்தூர் /

கோவைக்கு இந்த ரயில் மட்டும் வாரத்துக்கு 7 நாளும் வந்து செல்லும்..

கோவைக்கு இந்த ரயில் மட்டும் வாரத்துக்கு 7 நாளும் வந்து செல்லும்..

மாதிரி படம்

மாதிரி படம்

Coimbatore District News : கோவை ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் இந்த ரயில் மட்டும் வாரத்திற்கு 7 நாளும் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

மேட்டுப்பாளையம் - கோவை இடையே வாரத்தின் ஆறு நாட்கள் மட்டுமே பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. ஞாயிற்றுக்கிழமை அந்த ரயில் இயக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர்.

இதனையடுத்து மத்திய இணை மந்திரி எல் முருகன், ரயில்வே துறை அமைச்சகத்திற்கு எழுதியிருந்த கடிதத்தில், மேட்டுப்பாளையம் - கோவை ரயிலை ஞாயிற்று கிழமைகளிலும் இயக்க வேண்டும் என்று ஏராளமான பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தம்மிடம் கோரிக்கை விடுத்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதற்கு பதில் அளித்து ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் எழுதிய பதில் கடிதத்தில். கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்பட்டதாகவும், வாரத்திற்கு ஆறு நாட்கள் இயக்கப்பட்டு வந்த மேட்டுப்பாளையம்-கோவை பயணிகள் ரயில் இனி தினசரி இயக்கப்படும் என்றும், சென்னை எழும்பூர்-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில், பாபநாசம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : வேளாண் கல்லூரிகளுக்கான விளையாட்டு போட்டிகள் தொடக்கம்.. கோவையில் மாணவர்கள் உற்சாகம்..

ரயில்வே அமைச்சரின் அறிவிப்பை அடுத்து நாளை (4ம் தேதி) முதல் மேட்டுப்பாளையம் - கோவை பயணிகள் ரயில் வாரம் முழுவதும் இயக்கப்படும் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Coimbatore, Local News, Southern railway