Home /coimbatore /

ஓணம் பண்டிகை; கோவை வழியாக கேரளாவுக்கு செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஓணம் பண்டிகை; கோவை வழியாக கேரளாவுக்கு செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு  கோவை வழியாக 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இது பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கில் இயக்கப்படும் என்று  சேலம் கோட்ட ரயில்வே நிர்வகம்  தகவல் தெரிவித்துள்ளது. 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
    ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை வழியாக 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இது பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கில் இயக்கப்படுகிறது என்று சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் நெரிசலைத் தவிர்க்கும் வகையில், திருவனந்தபுரம்-ஐதராபாத் இடையிலான சிறப்பு ரெயில் (எண்:07120), வரும் 10-ம் தேதி இரவு 10 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு, 12-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு ஐதராபாத் சென்றடையும்.

    இந்த ரயில், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி ரயில் நிலையங்களில் நின்று செல்லும். கர்நாடகா மாநிலம் யஷ்வந்த்பூர் - கேரள மாநிலம் கொல்லம் இடையிலான சிறப்பு ரெயில் (06501), யஷ்வந்த்பூரில் இருந்து இன்று (புதன்கிழமை) பிற்பகல் 1 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

    கொல்லம் ரயில் கொல்லம் - யஷ்வந்த்பூர் இடையிலான சிறப்பு ரயில் (எண்:06502), கொல்லத்தில் இருந்து வியாழக்கிழமை காலை 6.10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 10 மணிக்கு யஷ்வந்த்பூர் சென்றடையும்.

    இந்த ரயில்கள், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணராஜபுரம் ரயில்நிலையங்களில் நின்று செல்லும்.

    சென்னை சென்ட்ரல் - எர்ணாகுளம் இடையிலான சிறப்பு ரயில் (எண்:06053), சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 12.15 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

    எர்ணாகுளம் - சென்னை சென்ட்ரல் இடையிலான சிறப்பு ரயில் (06054),எர்ணாகுளத்தில் இருந்து வரும் 9-ந் தேதி பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றடையும்.

    இந்த ரயில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி, அரக்கோணம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    நெல்லை-பெங்களூரு நெல்லை-பெங்களூரு கன்டோன்மென்ட் இடையிலான சிறப்பு ரயில் (எண்:06052), நெல்லையில் இருந்து வரும் 10-ந் தேதி காலை 8 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில் நிலையம் சென்றடையும்.

    இந்த ரயில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், பங்காருபேட், கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Coimbatore, Local News

    அடுத்த செய்தி