ஹோம் /கோயம்புத்தூர் /

உயிரிழந்த மகன் சேமித்த பழைய ரூபாய் நோட்டுகள்.. மாற்றித்தரக்கோரி போராடும் 80 வயது கோவை மூதாட்டி.!

உயிரிழந்த மகன் சேமித்த பழைய ரூபாய் நோட்டுகள்.. மாற்றித்தரக்கோரி போராடும் 80 வயது கோவை மூதாட்டி.!

கோவை

கோவை

Coimbatore Specials | கோவை பீளமேட்டை அடுத்த உப்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 80 வயதான மணியம்மாள் பாட்டி. இவரது கணவர் சுந்தர்ராஜ். கணவர் உயிரிழந்துவிட்ட நிலையில், மணியம்மாள் தனது மகன் செந்தில்குமாருடன் வசித்து வந்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

உயிரிழந்த தனது மகன் சேமித்து வைத்திருந்த பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தரக்கோரி கோவையைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி போராடி வருகிறார்.

கோவை பீளமேட்டை அடுத்த உப்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 80 வயதான மணியம்மாள் பாட்டி. இவரது கணவர் சுந்தர்ராஜ். கணவர் உயிரிழந்துவிட்ட நிலையில், மணியம்மாள் தனது மகன் செந்தில்குமாருடன் வசித்து வந்தார்.

லாரி ஓட்டுநரான செந்தில்குமார், கடந்த 2018-ம் ஆண்டு கர்நாடகாவுக்கு லாரி ஓட்டி சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார். இதனால் மூதாட்டி ஆதரவின்றி தனிமையில் வசித்து வருகிறார். பக்கவாத நோயால் அவதியுறும் இவருக்கு அண்டை வீட்டார் உதவி செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க: மதுரை மீனாட்சியம்மனுக்கு அடுத்து சிறப்பு வாய்ந்த முத்தீஸ்வரர் கோயில்.. அறியப்படாத தகவல்கள்..!

இதனிடையே சமீபத்தில் மூதாட்டி தனது வீட்டை முழுவதுமாக சுத்தம் செய்துள்ளார். அப்போது அவரது மகன் செந்தில்குமார் பயன்படுத்திய கைப்பை ஒன்று கிடைத்தது. அதனைப் பார்த்தபோது அதில் 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பழைய செல்லாத ரூபாய் நோட்டுகளான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இருந்தன.

இதனிடையே அந்த மூதாட்டி அந்த ரூபாய் நோட்டுகளுடன் கடந்த வாரம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று, தன்னிடம் இருக்கும் பழைய நோட்டுக்களுக்கு பதிலாக புதிய நோட்டுக்களை தர வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார்.

மேலும் படிக்க:  இந்த தெருவுக்குள்ள நுழைஞ்சாலே மிரண்டு போவீங்க..! மதுரை 10 தூண் சந்து சிறப்புகள்..!

ஆனால், நடைமுறை சிக்கல்களால் அந்த ரூபாய் நோட்டுக்களை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மாற்றித்தர முடியவில்லை. ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய மூதாட்டி, எப்போதும் மகன் சேமித்த பணத்துடன் அதிகாரிகள் வருவார்களா? பணத்தை மாற்றித்தருவார்களா? என்ற எதிர்பார்ப்பில் அமர்ந்துள்ளார்.

இதுகுறித்து மூதாட்டி மணியம்மாள் கூறுகையில், "யாரும் இல்லாமல் அக்கம்பக்கத்தினரின் உதவியோடு வாழ்ந்து வருகிறேன். இந்த பணத்தை மாற்றிக்கொடுத்தால் பெட்டிக்கடை வைத்து பிழைத்துக் கொள்வேன். வேறு எந்த உதவியும் எனக்கு வேண்டாம்." என்றார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அரசு பழைய ரூபாய் நோட்டுக்களை திரும்பக் கொடுக்க அளித்த கால அவகாசம் முடிந்த நிலையில், அவரிடம் இருக்கும் பணம் உடனடியாக மாற்றிக் கொடுக்கப்படுமா? என்பது சந்தேகமே. ஆதரவற்ற இந்த மூதாட்டிக்கு உதவ நினைப்பவர்கள் பாட்டியின் தொலைபேசி எண்ணுக்கு அழைத்து உதவிடலாம். மணியம்மாள் தொலைபேசி எண்:9345910083

Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News