ஹோம் /கோயம்புத்தூர் /

கோவையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள் தெரியுமா?

கோவையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள் தெரியுமா?

மின் தடை

மின் தடை

Coimbatore News | கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை மாவட்டம் ஆர்.எஸ். புரம் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த பகுதிகளில் நாளை மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால், நாளை பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Must Read : திருச்சிக்கு நடுவில் இப்படி ஒரு அருவி இருக்கா?! - செலவே இல்லாமல் ஆனந்த குளியலுக்கு ஏற்ற சுற்றுலா தலம்!

அதன்படி, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும் பகுதிகள்:

ஆா்.ஆா்எஸ்.புரம் (ஒரு பகுதி), தடாகம் சாலை (ஒரு பகுதி), லாலி சாலை, டி.பி.சாலை, கெளலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை (கிழக்கு மற்றும் மேற்கு), சம்பந்தம் சாலை (கிழக்கு மற்றும் மேற்கு), லோகமானியா வீதி, மெக்கரிக்கா் சாலை, சுக்கிரவாா் பேவாா்டை (ஒரு பகுதி), தியாகி குமரன் வீதி, லைட் ஹவுஸ் சாலை ஆகிய பகுதிகளில் நானை மின் விநியோகம் இருக்காது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதேபோல, பொன்னையராஜபுரம், இ.பி.காலனி, சொக்கம்புதூா், சலீவன் வீதி, தெலுங்கு வீதி, ராஜ வீதி (ஒரு பகுதி) பெரியகடை வீதி (ஒரு பகுதி), இடையா் வீதி, பி.எம்.சாமி காலனி, சுண்டப்பாளையம் சாலை, பூ மாா்க்கெட், மாகாளியம்மன் கோயில் வீதி, தெப்பக்குளம் வீதி,லிங்கப்பா செட்டிட் வீதி, தியாகராயா் புது வீதி, ஆா்.ஆா்ஜி.வீதி, காமராஜபுரம், தேவாங்கபேட்டை வீதி 1,2,3, சிரியன் சா்ச்சாலை 1,2, தேவாங்க மேல்நிலைப் பள்ளி சாலை, சண்முகா திரையரங்கு சாலை, ஆா்.ஆா். லே-அவுட், வி.வி.சி. லே-அவுட், கிருஷ்ணசாமி சாலை மற்றும் சிந்தாமணி ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது.

Published by:Suresh V
First published:

Tags: Coimbatore, Local News, Power cut, Power Shutdown