ஹோம் /கோயம்புத்தூர் /

கோவை மக்களே... உங்கள் ஏரியாவில் நாளை மின் தடையா? - செக் பண்ணிக்கோங்க

கோவை மக்களே... உங்கள் ஏரியாவில் நாளை மின் தடையா? - செக் பண்ணிக்கோங்க

மின் தடை

மின் தடை

Coimbatore District | கோவை மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் உங்கள் பகுதி இருக்கிறதா என்று செக் பண்ணிக்கோங்க.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை மாவட்டத்தில் நாளை (03-12-2022) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரங்களை மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை உக்கடம் மின் நிலையத்தில் நாளை பாரமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால் பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்படும் என்று மின் வாரியம் சார்பில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Must Read : சுற்றுலா பயணிகள் என்ஜாய் பண்ண ஏற்ற இடம் - கன்னியாகுமரி குற்றியார் இரட்டை அருவி!

மின்தடை பகுதிகள்:

வெரைட்டி ஹால் சாலை, டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, தியாகி குமரன் மார்க்கெட், செல்வபுரம், கெம்பட்டி காலனி, கரும்புக்கடை, ஆத்துப்பாலம், உக்கடம், சுங்கம் புறவழிச் சாலை, சண்முகா நகர், ஆல்வின் நகர், இந்திரா நகர், பாரி நகர், டாக்டா் முனுசாமி நகர், ஸ்டேட் பேங்க் சாலை, ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை, ரயில் நிலையம் மற்றும் லாரிப்பேட்டை.

First published:

Tags: Coimbatore, Local News, Power cut, Power Shutdown