சோமனூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நொய்யல் ஆற்றை ஒட்டி, குப்பைக் கிடங்கு அமைப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும், இதனால் விவசாய நிலங்கள் பாழாகும் அபாயம் உள்ளதாகவும் கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி நகராட்சிக்குட்பட்ட சோமனூர் வழியாக நொய்யல் ஆறு செல்கிறது. இந்த நொய்யல் ஆற்றங்கரை பகுதியில் புதிய குப்பைக் கிடங்கு அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
குப்பைக் கிடங்கு அமைய உள்ள ஆற்றங்கரையை ஒட்டி 30 ஏக்கருக்கு மேல் தென்னை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே ஏற்கனவே அங்கு குப்பை கொட்டும் பகுதி உள்ள நிலையில், புதிய குப்பை கிடங்கு அமைத்து நிலத்தை பாழாக்க வேண்டாம் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆற்றங்கரை ஓரம் குப்பைக்கிடங்கு அமைக்கக்கூடாது என்று விதிகள் உள்ள நிலையில், தற்போது அங்கு குப்பைக் கிடங்கு அமைக்கப்பட்டால் மழைக்காலங்களில் குப்பைகள் ஆற்று நீரில் கலக்கும் என்றும், குப்பையில் இருந்து வடியும் நீர் நிலத்தடி நீரை பாதித்து, விவசாயத்திற்கே பேராபத்தாக நேரிடும் என்றும் அப்பகுதி விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே சோமனூரில் புதிய குப்பைக்கிடங்கு அமைக்கக்கூடாது என்று வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “சோமனூர் பகுதியில் புதிய குப்பைக்கிடங்கு தேவையில்லாத நிலையில் இந்த புதிய குப்பைக் கிடங்கு அமைக்கப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. எதிர்ப்புகளை மீறி குப்பைக் கிடங்கு அமைக்க முற்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்.” என்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agriculture, Coimbatore, Farmers, Local News