Home /coimbatore /

பொது இடங்களில் போஸ்டர் ஒட்டினால் குற்றவியல் நடவடிக்கை.. கோவை மாநகராட்சி எச்சரிக்கை

பொது இடங்களில் போஸ்டர் ஒட்டினால் குற்றவியல் நடவடிக்கை.. கோவை மாநகராட்சி எச்சரிக்கை

கோவை

கோவை மாநகராட்சி

Coimbatore News: நியூஸ் 18 செய்தி எதிரொலி.. பொது இடங்களில் போஸ்டர் ஒட்டினால் குற்றவியல் நடவடிக்கை.. எச்சரிக்கை விடுத்த கோவை மாநகராட்சி

கோவை மாநகராட்சியில் பொது இடங்கள், அரசு அலுவலக கட்டிடம், மேம்பால தூண்களில் சுவரொட்டிகள் ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகரை பொலிவுபடுத்த பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரேஸ்கோர்ஸ், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

கோவை மாநகரில் உள்ள குளக்கரைகளில் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்படியாக கோவையை அழகுபடுத்த அரசு முயற்சி செய்து கொண்டிருக்கும் நிலையில், கோவையின் அழகை கெடுக்கும் விதமாக அமைந்துள்ளது போஸ்டர் கலாச்சாரம்.

பொது சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்..


கோவை மாநகராட்சி பகுதியில் குறிப்பாக அவினாசி சாலை மேம்பாலம், திருச்சி சாலை மேம்பாலம் உள்ளிட்ட மேம்பாலங்கள் மற்றும் அரசு அலுவலக கட்டிடங்களில் அரசியல் கட்சியினரும், தனியார் நிறுவனத்தினரும் சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர்.

இதனைத் தடுக்க முடியாமல் மாநகராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறையினரும் திணறி வந்தனர். இதுகுறித்து நியூஸ் 18 உள்ளூர் செய்தியில் விரிவான செய்தி வெளியானது.இதனிடையே திருச்சி சாலையில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் இரண்டு தூண்களில் தேசத்தலைவர்கள் புகைப்படங்கள் ஒட்டப்பட்டன.

பொது சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்..


மேலும், காந்திபுரம் மேம்பாலத்தில் ஒரு தூணி நெடுஞ்சாலைத்துறை சார்பில் விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டது. மற்ற இடங்களிலும் இது போன்ற சுவரோவியங்கள் வரைந்தால் கோவையை அழுக்காக்கும் போஸ்டர் கலாச்சாரம் முடிவுக்கு வரும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

சென்னையை போல் கோவையிலும் மேம்பால தூண்களை அழகுபடுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனிடையே கோவை மாநகரில் உள்ள மேம்பால தூண்களிலோ அல்லது அரசு அலுவலகங்களின் சுவர்களிலோ விளம்பரங்கள் எழுதவோ, சுவரொட்டிகள் ஒட்டவோ கூடாது என்று கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை மீறினால் சம்மந்தப்பட்ட நிறுவனம், விளம்பர நிறுவனம், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகளுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு, குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்படும் என எச்சரக்கை விடுத்துள்ளார்.

கோவை மாநகராட்சியின் இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News

அடுத்த செய்தி