Home /coimbatore /

நியூஸ் 18 உணவு திருவிழாவில் என்னென்ன ஸ்பெஷல்..? 

நியூஸ் 18 உணவு திருவிழாவில் என்னென்ன ஸ்பெஷல்..? 

நியூஸ்18 உணவு திருவிழா

நியூஸ்18 உணவு திருவிழா

கோவையில்  நியூஸ் 18 உணவு திருவிழா நடைபெற்று வருகிறது. ப்ரோசோன் வணிக வளாகத்தில் நடைபெற்று வரும் இந்த உணவுத்திருவிழாவில் உள் நாட்டு மற்றும் வெளி நாட்டு உணவு வகைகள் கிடைக்கின்றன. 

    கோவையில் நியூஸ் 18 உணவு திருவிழா நடைபெற்று வருகிறது. ப்ரோசோன் வணிக வளாகத்தில் நடைபெற்று வரும் இந்த உணவுத்திருவிழாவில் உள் நாட்டு மற்றும் வெளி நாட்டு உணவு வகைகள் கிடைக்கின்றன. 

    மேலும், வீட்டு உபயோகப்பொருட்கள், மாடித்தோட்டம் அமைப்பதற்கான விவசாய பொருட்கள், மிளகாய், கருப்பட்டி ஆகிய மூலப்பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம் வகைகள், 201 வகையிலான முட்டையில் தயாரித்த உணவு பொருட்கள், பர்மா நாட்டு உணவு வகைகள் கிடைக்கின்றன.

    இவை தவிர குழந்தைகளுக்கான படகு விளையாட்டு, ஆக்டோபஸ் ஏர் பலூன் விளையாட்டு. கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட சிறப்பம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

    கடந்த 3ம் தேதி தொடங்கிய இந்த உணவு திருவிழா தினந்தோறும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற்று வரும் சூழலில் இன்றுடன் உணவுத்திருவிழா நிறைவடைகிறது.

    இன்னும் உணவு திருவிழாவுக்கு செல்லாதவர்கள் இன்றே சென்று சுவைத்தும், ரசித்தும் மகிழ்ந்திடுங்கள்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Coimbatore

    அடுத்த செய்தி