ஹோம் /கோயம்புத்தூர் /

கொரோனா பரவல் - கோவை மாவட்டத்தில் தயார் நிலையில் 6,400 படுக்கைகள்

கொரோனா பரவல் - கோவை மாவட்டத்தில் தயார் நிலையில் 6,400 படுக்கைகள்

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

Coimbatore District | கொரோனாவை எதிர்கொள்ள கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 6,400 படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

வெளிநாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் (BF 7) பரவுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மாவட்டத்தில் 6,400 படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.

புதிய வகை கொரேனா (BF 7) வைரஸ் சீனா உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இது பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே கொரோனா பரவலை தடுக்க, செய்ய வேண்டியவை குறித்த அவசர கால ஒத்திகை நாடு முழுவதும் நடத்தப் படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

அதன்படி கோவை அரசு தலைமை அரசு மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் அவசர கால ஒத்திகை நடைபெற்றது. இதில், கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளை ஆம்புலன்ஸ் வாகனங்களில் மருத்துவமனைகளுக்கு அழைத்து வருவது, அங்கு அவர்களுக்கு ரத்த அழுத்தம், இணை நோய்கள் உள்ளதா? என்பது குறித்த பரிசோதனை செய்வது, உள்நோயாளிகளாக அனுமதிப்பது உள்ளிட்டவை குறித்து ஒத்திகை நடத்தப்பட்டது.

அத்துடன், மருத்துவமனைகளில் தயார் நிலையில் உள்ள படுக்கைகள், ஆக்சிஜன், மருந்து கையிருப்பு உள்ளிட்டவை குறித்தும் ஒத்திகை நடத்தப்பட்டது. அதன்படி, கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற அவசரகால ஒத்திகையை கலெக்டர் சமீரன் பார்வையிட்டார்.

பின்னர் அவர், “கோவை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 6,400 படுக்கைகள் தயார் நிலையில் இருக்கின்றன. இதில் 3,537 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளாகவும். மேலும் மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கோவையில் இதுவரை 100 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியும், 96.9 சதவீதம் பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியும், 14 சதவீதம் பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லும்போது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் முக கவசம் அணிந்து ஊழியர்கள் பணியாற்ற வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அரசு தலைமை மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் படுக்கைள் தயார் நிலையில் இருக்கின்றன என்று தெரிவித்துள்ளார்.

Must Read : சோழர்களின் வெற்றி தெய்வம்... திருச்சி உக்கிர காளியம்மன் கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா!?

இந்நிலையில், கொரோனா பரவலை எதிர்கொள்ளும் வகையில், தமிழகம் உட்பட நாடு முழுவதும் முக்கிய மருத்துவமனைகளில் அவசரகால ஒத்திகை நடைபெற்றது என்றும், தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்காக 1.75 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Coimbatore, CoronaVirus, Local News