Home /coimbatore /

கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் புதிய கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் துவக்கம்

கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் புதிய கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் துவக்கம்

கோவை

கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி

Coimbatore Krishnambal Women's College | கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் புதிய கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் துவக்கம். ஒரே நேரத்தில் 20 பேர் பயிற்சி பெறும் வகையில், இந்த பயிற்சி மையம் தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கேற்ப செயல்படும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore
கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி வளாகத்தில் ஜி.ஆர்.ஜி.- எல்.ஜி டிஜிட்டல் இன்னவேஷன் டோஜா எனும் புதிய கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் துவங்கப்பட்டுள்ளது.

கோவை பீளமேடு பகுதியில் பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

வளர்ச்சி பெறும் துறைகளில் பெண்கள் சிறப்பு தொழில் நுட்ப அறிவு பெற்று பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும், என்ற நோக்கத்தில், ஏர் கம்பிரசர் தயாரிப்பு நிறுவனமான எல்.ஜி நிறுவனத்துடன் இணைந்து, கல்லூரி வளாகத்தில் ஜி.ஆர்.ஜி - எல்.ஜி. டிஜிட்டல் இன்னோவேசன் டோஜோ என்ற புதிய கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் துவங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:   கோவையில் சில்லென்று கொட்டும் அழகிய அருவிகள்... இவை சுற்றுலா பயணிகள் மிஸ் பண்ணக்கூடாத இடங்கள்!

இந்த புதிய ஆராய்ச்சி மையத்தை ஜி.ஆர்.ஜி. கல்வி குழுமங்களின் தலைவர் நந்தினி மற்றும் எல்.ஜி. எக்யூப்மெண்ட்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் ஜெய்ராம் வரதராஜ் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

மாணவிகள் கல்லூரிகளில் பயிலும் போதே, தொழில்துறையினருடன் இணைந்து பணியாற்றி தொழிற்சாலை அனுபவம் பெறும் வாய்ப்பை இந்த ஆராய்ச்சி மையம் உருவாக்கும். இந்த மையத்தில் மாணவிகளுக்கு தேவையான கணினிகள் மற்றும் அதற்கான மென்பொருளை எல்.ஜி நிறுவனம் வழங்குகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஒரே நேரத்தில் 20 பேர் பயிற்சி பெறும் வகையில், இந்த பயிற்சி மையம் தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கேற்ப செயல்படும். மேலும் இங்கு பயிற்சி பெறும் அனைவரும் செயற்கை நுண்ணறிவு, எந்திர படிப்பு, விர்ச்சுவல் ரியலிட்டி மற்றும் ரோபோட்டிக் பிராசஸ் ஆட்டோமேஷன் ஆகியவற்றில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News

அடுத்த செய்தி