ஹோம் /கோயம்புத்தூர் /

Coimbatore News : கோவையில் திருநங்கைகள், மாற்றுத்திறானாளிகளுக்கு வீடுகள் - முதல்வருக்கு நன்றி தெரிவித்த பயனாளிகள்

Coimbatore News : கோவையில் திருநங்கைகள், மாற்றுத்திறானாளிகளுக்கு வீடுகள் - முதல்வருக்கு நன்றி தெரிவித்த பயனாளிகள்

X
கோவை

கோவை

Coimbatore News : கோவை மாவட்டத்தில் சூலூர், பன்னீர்மடை மற்றும் செல்வபுரம் ஆகிய பகுதிகளில் நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 93 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை: தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்ட வீடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலமாக கோவையை சேர்ந்த 1,120 பயனாளிகளுக்கு வழங்கினார்.

கோவை மாவட்டத்தில் சூலூர், பன்னீர்மடை மற்றும் செல்வபுரம் ஆகிய பகுதிகளில் நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 93 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டது.

இந்த குடியிருப்புகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக கோவையை சேர்ந்த 30 மாற்றுத்திறனாளிகள் மற்றும் 46 திருநங்கைகள் உட்பட மொத்தம் 1,120 பேருக்கு வழங்கினார்.

மேலும் படிக்க : ராமநாதபுரம் சென்றால் இந்த இடத்திற்குப் போக தவறாதீங்க - பிரமிப்பூட்டும் அரண்மனை!

மேலும், அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் தாமாகவே வீடுகட்டும் திட்டத்தில் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மானியத்துடன் வீடுகட்டிக் கொள்ல ஆயிரம் பயனாளிகளுக்கு 21 கோடி ரூபாய் மதிப்பிலான பணி ஆணையும் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க :  இந்த பேருந்திற்கு பெட்ரோல், டீசல் ஊற்ற தேவையில்லை - திருப்பூரில் புதிய முயற்சி

இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி மேயர் கல்பனா, துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பயனாளிகள்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தற்போது வழங்கப்பட்டுள்ள வீட்டில் பல்வேறு வசதிகள் இருப்பதாகவும், இதற்காக தமிழக அரசுக்கு நன்று தெரிவிப்பதாகவும் வீடுகளுக்கான ஆணையை பெற்றுக் கொண்ட திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

First published:

Tags: Coimbatore, Local News