ஹோம் /கோயம்புத்தூர் /

கோவை பூம்புகார் விற்பனையகத்தில் விற்பனைக்கு குவிந்துள்ள கொலு பொம்மைகள்..!

கோவை பூம்புகார் விற்பனையகத்தில் விற்பனைக்கு குவிந்துள்ள கொலு பொம்மைகள்..!

கோவை

கோவை - கொலு பொம்மைகள்

Coimbatore Navarathri Golu Dolls | கோவை பூம்புகார் விற்பனையகத்தில் நவராத்திரி பொம்மைகள் விற்பனை களை கட்டியுள்ளது. 10 ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை பொம்மைகள் விற்பனை செய்யப்படுகின்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

நவராத்திரி தினத்தை முன்னிட்டு கோவை பூம்புகார் விற்பனையகத்தில் கொலு பொம்மைகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்து குவிந்துள்ளன.

புரட்டாசி மாதம் கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகை ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு வகையில் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் 10 நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழா கோவில்கள் மட்டுமல்லாது வீடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

இந்த நாட்களில் வீடுகளில் கொலு அமைத்து அம்மனை வணங்குவது வழக்கம். இதற்காக வெவ்வேறு தெய்வங்களின் உருவச்சிலைகள், மனிதர்கள் போன்ற பொம்மைகள், விலங்குகள், பறவைகளின் உருவ பொம்மைகள், வீடுகளில் நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்களைப் போலவே குட்டி குட்டி பொம்மைகள் என பல்வேறு விதமான பொம்மைகள் வைக்கப்படும்.

மேலும் படிக்க:  கோவை மாநகருக்கு எப்படி காவல் தெய்வமாக மாறினார் கோனியம்மன்

தினந்தோறும் இந்த பொம்மைகளுக்கு பூஜைகள் செய்யப்படும். எனவே ஒவ்வொரு நவராத்திரி பண்டிகையின் போதும் பொம்மைகள் விற்பனை களைகட்டும். அந்த வகையில் கோவை ராமநாதபுரம் அடுத்துள்ள பூம்புகார் விற்பனையகத்தில் நவராத்திரி பொம்மைகள் விற்பனை களை கட்டியுள்ளது.

2 இன்ச் அளவிலிருந்து 4 அடி உயரம் வரை பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கடவுள்கள், மனிதர்கள், விலங்குகள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க:  கோவையில் போக்குவரத்து மாற்றம் - நெரிசலை தவிர்க்க இந்த பாதையை பயன்படுத்துங்க.!

10 ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை பொம்மைகள் விற்பனை செய்யப்படுகின்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Coimbatore Poombuhar
பூம்புகார் விற்பனையகத்திற்கு செல்லும் வழியைக் காட்டுகிறது கூகுள் மேப் : 

Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News