முகப்பு /கோயம்புத்தூர் /

கோவையில் தேசிய அளவிலான Wushu போட்டி.. ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட மாணவிகள்..

கோவையில் தேசிய அளவிலான Wushu போட்டி.. ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட மாணவிகள்..

X
மோதிக்கொண்ட

மோதிக்கொண்ட மாணவிகள்

Coimbatore Wushu competition | தமிழகம், கர்நாடகா, கேரளா, மணிப்பூர், ராஜஸ்தான், டெல்லி உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 175 வீராங்கனைகள் பங்கேற்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான பெண்களுக்கான வூசு போட்டியில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டு அதிரடி காட்டியுள்ளனர்.

கோவையில் முதல் முறையாக கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி நடைபெறுகிறது. இந்த விளையாட்டின் ஒரு பகுதியாக பெண்களுக்கான ஜூனியர் வூசு போட்டி கோவையில் சரவணம்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.

இந்திய மற்றும் தமிழ்நாடு வூசு சங்கம் மற்றும் மத்திய அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்தி வரும் இந்த போட்டியில் தமிழகம், கர்நாடகா, கேரளா, மணிப்பூர், ராஜஸ்தான், டெல்லி உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 175 வீராங்கனைகள் பங்கேற்றனர்.

ஷான்சூ மற்றும் தவுலூ என்ற இரண்டு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் கலந்து கொண்ட ஜூனியர் மாணவிகள் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் ஷான்சூ சண்டை பிரிவில் 45 கிலோ எடைப்பிரிவில் ஹரியானாவைச் சேர்ந்த சோனியா என்ற மாணவி முதலிடத்தைப் பிடித்தார்.

இதே போல் 48 கிலோ எடைப்பிரிவில் மணிப்பூரைச் சேர்ந்த சோபா தேவி முதலிடத்தைப் பிடித்தார். 52 கிலோ எடைப்பிரிவில் ஹரியானவை சேர்ந்த கோமல் முதலிடைத்தையும், 56 கிலோ எடைப்பிரிவில் ஹரியானவை சேர்ந்த தீபிகா முதலிடைத்தையும், 60 கிலோ எடைப்பிரிவில் ஹரியானவை சேர்ந்த ஹிமன்சி முதலிடைத்தையும் பிடித்தனர். இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ் ,பதக்கங்கள் வழங்கப்பட்டன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை தவுலூ என்று தனிநபர் பிரிவு போட்டிக்கான இறுதிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தேர்வு செய்யப்படும் வீராங்கனைகள் சர்வதேச அளவில் நடைபெற உள்ள போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Coimbatore, Local News