முகப்பு /கோயம்புத்தூர் /

கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் அசத்திய மாணவர்கள்..

கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் அசத்திய மாணவர்கள்..

X
கோவையில்

கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்ப போட்டி

National Level Silambam Competition in Kovai | கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் சிலம்பத்தில் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர்.

  • Last Updated :
  • Coimbatore, India

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தேசிய அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது.

இந்திய சிலம்பம் சங்கம் சார்பாக தேசிய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகள் கோவை வெள்ளகிணறு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட வீர் வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

இதில் குத்துவரிசை, நெடுங்கம்பு வீச்சு, நடுக்கம்பு வீச்சு, மான் கொம்பு, வேல் கம்பு, இரட்டைக் கம்பு, சுருள் வாள், தொடுமுறை கம்பு சண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான சிலம்ப போட்டிகளில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர்.

கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்ப போட்டி

ஜூனியர், சப் ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் என நான்கு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றதில் 5 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர்.வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்தபோட்டி மூலம் தேர்வு செய்யப்படுபவர்கள் மலேசியாவில் நடைபெற உள்ள சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

    First published:

    Tags: Coimbatore, Local News